தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, “
1. சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப் பணிகள் தேர்வாணைய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.
2. காத்திருப்பு பட்டியலிலும் விடுப்பிலும் இருந்த ஏடிஜிபி மகேஸ்வரி தயால், சென்னை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சென்னை சிறைத்துறை அமரேஷ் புஜரி ஏ.டி.ஜி.பி. மாற்றப்பட்டு, முதன்மை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. முதன்மை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி பிரமோத் குமார் ஐ.பி.எஸ். மாற்றப்பட்டு, தமிழ்நாடு பொது வழங்கல் விநியோக (டான்ஜெட்கோ) சென்னை, ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ். மாற்றப்பட்டு, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐ.ஐி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. டி.ஐ.ஜி. தர்மராஜன் ஐ.பி.எஸ். சென்னை மாநகராட்சி கிழக்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சென்னை கடலோர அமலாக்கப்பிரிவு எஸ்.பி. சந்திரசேகர் மாற்றப்பட்டு, கோயம்புத்தூர் மண்டல குடிமைப் பொருள் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. கோயம்புத்தூர் மண்டல குடிமைப்பொருள் எஸ்.பி. பாலாஜி மதுரை நகர தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. மதுரை தெற்கு துணை கமிஷனர் பிரதீப் ஐ.பி.எஸ்., திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், சென்னை மாநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. கிழக்கு சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சாமிசிங் மீனா ஐ.பி.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.