தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்துக்கு கரெண்ட் ஷாக் அடிக்க தீபா பதறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

குழப்பத்தில் தீபா:

அதாவது சிதம்பரம் மீண்டும் தீபாவுக்கு போன் செய்து எப்படியோ உன் மாமனாரை காப்பாத்திட்ட அடுத்து உன் குடும்பத்துக்கு நீச்சல் பயிற்சி கொடுக்க போறேன் என்று சொல்லி போனை வைக்க தீபா யாருக்கு நீச்சல் தெரியாது என்று தெரியாமல் குழம்பி தவிக்கிறாள்.

மறுபக்கம் அருணாச்சலம், அரவிந்த் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருக்க அருணையும் குளிக்க கூப்பிட அவன் எனக்கு நீச்சல் தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாதாப்பா என்று சொல்லி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்க அவர்கள் ஸ்பீக்கரில் பாட்டை வேகமாக வைத்து குளித்து கொண்டிருக்கின்றனர்.

Continues below advertisement

அடுத்து நடக்கப்போவது என்ன?

பிறகு தீபா பதற்றத்தோடு ஓடி வர மீனாட்சி என்னாச்சு என்று கேட்க யாருக்கு நீச்சல் தெரியாது என்று கேள்வி கேட்க அருணுக்கு நீச்சல் தெரியாது என்று சொல்கிறாள். அதற்கேற்றாற் போல் இங்கே அருணை யாரோ பிடித்து தள்ள அவன் தண்ணீருக்குள் விழுந்து தவிக்கிறான்.

சரியான சமயத்தில் ஓடி வரும் தீபா ஸ்பீக்கரை ஆப் செய்து விட்டு அருணை காப்பாற்ற சொல்லி கத்த எல்லாரும் அவனை காப்பாற்றி மேலே அழைத்து வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க 

Tamil Thalaivas: தொடர்ந்து 6 முறையாக சறுக்கிய தமிழ் தலைவாஸ் முயற்சி; புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?

PM Modi Visit TN: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை.. ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. முழு விவரம் இதோ..

TN Rain Alert: அரபிக்கடலில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..