Pro Kabaddi League: 10வது சீசனில் இம்முறை 12 அணிகள் களமிறங்கியுள்ளது. இதில் கடந்த முறை அரையிறுதிப் போட்டிவரை முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணி இம்முறை கோப்பையை வெல்லும்  என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும், அதாவது ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் 22 லீக் போட்டிகள் உள்ளது. லீக் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். 


இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி வித்தியாசம் என்பது எதிர்மறையில் அதாவது மைனஸ் 41 ரெய்டு பாய்ண்டுகளாக உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணி என்றால் அது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி. இந்த அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 33 புள்ளிகளை எடுத்துள்ளது. அடுத்த இடத்தில் புனேரி பல்தான் அணி உள்ளது. இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த அணி 31 புள்ளிகளை எடுத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அணி என்றால் அது தெலுங்கு டைட்டன்ஸ் அணிதான். இந்த அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 


இந்த தொடரில், உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் நேற்று அதாவது டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்றது. 50 வது லீக் ஆட்டத்தில்  தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.


 




தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ்:


நடப்பு சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2ல் வெற்றி, 7 ல் தோல்வி என 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. 


இதேபோல், 20 புள்ளிகளுடன் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த பெங்களூரு புல்ஸ் அணி இன்றைய வெற்றியின் மூலம் 7 வது இடத்திற்கு முன்னேறியது. 


தமிழ் தலைவாஸ்:


Raid points: 21


Super raids : 0


Tackle points: 14


All out points: 2


Extra points: 0


 பெங்களூரு புல்ஸ்:


Raid points: 20


Super raids : 1


Tackle points: 13


All out points: 2


Extra points: 3