கங்குவா


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை ரூ 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாபி தியோல், கருணாஸ், நட்டி நடராஜன், பிரேம்குமார், திஷா பதானி, கார்த்தி ஆகியோர் பலரும் நடித்திருந்தனர்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. உலகளவில் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு தற்போது 11 ஆம் நாளில் படம் வசூலுக்கு திணறி வருகிறது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் கங்குவா உலகளவில் ரூ.108 கோடிவரை  வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பாகுபலி ரேஞ்சுக்கு வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.108 கோடி வரையில் தான் வசூல் எடுத்துள்ளது பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. திரையரங்கில் வெளியாகிய நான்கு வாரங்கள் நிறைவடைந்ததும் படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கங்குவா ஓடிடி ரிலீஸ்


கங்குவா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ 100 கோடிக்கு வாங்கியுள்ளது. வரும் டிசம்பர் 13 ஆம் தேதி கங்குவா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிடியில் வெளியான பின் கங்குவா படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




சூர்யா அடுத்தபடியாக கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்துள்ளார். கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் இப்படம் சூர்யாவுக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் சூர்யாவின் 45 ஆவது படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவிருக்கிறார். இப்படத்தின் மீதும் அதிகப்படியான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. 




மேலும் படிக்க : Watch Video : டிவியில் அம்மாவைப் பார்த்ததும் செம குஷி...விக்னேஷ் சிவன் பகிர்ந்த க்யூட் வீடியோ


Devi Sri Prasad : குறை சொல்லிட்டே இருக்காங்க... குட் பேட் அக்லி தயாரிப்பாளரை தாக்கிய டி.எஸ்.பி