நயன்தாரா விக்னேஷ் சிவன்
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் எங்கு திரும்பினாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் வீடியோக்கள் தான் உலா வருகின்றன. அதிலும் குறிப்பாக நயன்தாரா பற்றிய ஆவணப்படம் வெளியானதில் இருந்து ப்ரோமோஷன்களுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. தங்கள் வாழ்க்கையில் எல்லா தருணங்களையும் வீடியோக்களாக எடுத்து பகிர்ந்து வருகிறது இந்த தம்பதி. ஒரு தரப்பு ரசிகர்கள் இந்த வீடியோக்களுக்கு இதய எமோஜிகளை பறக்கவிட்டாலும் இன்னொரு தரப்பினர் 'உங்களுக்கு வேற வேலையே இல்லையா' என்று தங்கள் கடுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வடமாநிலம் சென்றிருந்தபோது ஒரு சாதரண ஹோட்டலில் அமர்ந்து உணவருந்தும் வீடியோ வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் சாதாரண ஹோட்டலில் போய் சாப்பிடுவது எல்லாம் சரிதான் ஆனால் அதை ஒரு தனி ஆள் வைத்து வீடியோ எடுத்து இப்படி செல்ஃப் ப்ரோமோஷன் செய்துகொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பினார்கள். சைக்கிளில் போவது , ரோட்டில் சாதாணமாக நடப்பது என பிரபரலங்கள் தங்கள் சிம்ப்ளிசிட்டியை காட்ட இந்த மாதிரியான ப்ரோமோஷன்கள் செய்வதை கைவிட்டே 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மகன்களின் வீடியோக்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்
தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்கள் உயிர் உலகின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் தங்கமே பாடலை பார்த்து இருவரும் மழலை மொழி பேசும் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் மறுபக்கம் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் ப்ரோமோஷன் மெட்டீரியலாக பயன்படுத்த வேண்டுமா என்கிற கேள்வி நெட்டிசன்ஸ் எழுப்பியுள்ளார்கள். நானும் ரவுடிதான் படத்தை வைத்து தனுஷ் உடன் பெரிய பிரச்சனையே நடந்து முடிந்துள்ள நிலையில் மறுபடி மறுபடி எதிர் தரப்பை சீண்டும் வகையில் இந்த மாதிரியான செயல்பாடுகள் தவிர்க்கப்படலாம் என்பது ரசிகர்களின் கோரிக்கை.