நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமான் இசையமைத்து, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 5 மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. 






நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர்களின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் படத்தை பார்த்து பாராட்டினர் அதே சமயம் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் படத்தில் இழிவுப்படுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட சூர்யா, பின்னர் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்கவே இல்லை. அப்படியும் இப்படியுமாக சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 


இதனிடையேதான் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தான் நடித்த படங்கள் மட்டுமல்லாது தயாரித்த படங்களை ஓடிடி தளத்திற்கு கொடுத்து வந்த சூர்யாவின் இந்தப் படம் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திரையரங்கில் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் பரபரப்புக்கிடையில் இயக்குநர் பாலாவுடன் இணைய இருப்பதாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். சூர்யாவின் இந்த தொடர் அப்டேட்டுகளால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.  


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்