Valimai First Single Release: வருகிறதா ‛வலிமை’ பாடல்....? சோனி மியூசிக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கும் நேரம் குறித்து இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று இரவு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. அஜித்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தீனா தொடங்கி பல வெற்றி படங்கள் அமைந்துள்ளன. எனவே இந்தப் படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவும் ஹிட் அடிக்கும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

Continues below advertisement

இந்நிலையில், இன்று வெளியாக இருக்கும் பாடலை யுவன் பாடியிருக்கலாம் என தெரிகிறது. மாலை வெளியாக இருக்கும் சிங்கிளை எதிர்பார்த்து இப்போது, நெட்டிசன்கள் #ValimaiFirstSingle ஹேஷ்டேகை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து, வலிமை பட இசை உரிமையை பெற்றுள்ள சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கும் நேரம் குறித்து இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

JIO OFFER | ‛ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ‘ : ரூ.200க்கு குறைவான ஜியோவின் அசத்தல் திட்டங்கள் !

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை பொருத்தவரை, ஆகஸ்ட் இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை பொருத்து, படத்தின் வெளியீடு தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. 

அஜித் ரசிகர்கள், பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட் போட்டி, கால்பந்து போட்டி, இந்தியா - நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என எங்கு பார்த்தாலும், வலிமை அப்டேட் கேட்டு அதகளப்படுத்தினர். இந்நிலையில், திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

India vs England : பாகுபலி Vs பல்வாள் தேவன் மோதலும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரும்!

Continues below advertisement