பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அவ்வபோது அசத்தலான பல திட்டங்களை தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய சலுகையை தனது  ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த சலுகையை பெற ஜியோ அறிமுகப்படுத்திய , ஜியோ போனை பயன்படுத்தும் பிரீபெய்ட் வாடிக்கையாளாரக இருக்க வேண்டும் . அவ்வாறு இருக்கும் பட்சத்தில்  வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு சலுகைகளை பெற முடியும். இந்த திட்டம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. ரூ .39, ரூ .69, ரூ .75, ரூ .125, ரூ .155 மற்றும் ரூ.185   போன்ற மதிப்பீட்டில் , இந்த ஒன் பிளஸ் ஒன் ஆஃபரை பயனாளர்கள் பெற முடியும்.

Continues below advertisement





ரூ.39 திட்டத்தில் ஜியோபோன் பயனாளர்கள்  வரம்பற்ற அழைப்புகளை மேற்க்கொள்ள முடியும். முன்னதாக 100mb  டேட்டாவை நாள் ஒன்றுக்கு பயனாளர்கள் பயன்படுத்தும் வசதி இருந்தது, தற்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 200mb  டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும்.இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் இலவச எஸ்.எம்.எஸ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ.69 திட்டத்தின் மூலம் பயனாளர்கள்  0.5 GB டேட்டாவை பெற முடிந்தது. தற்போது அது 1GB ஆக கிடைக்கிறது. மேலும் 14 நாட்களுக்கான அன்லிமிட்டட் அழைப்புகளையும் இதில் பெறலாம். இந்த சேவையிலும் இலவச எஸ்.எம்.எஸ் வசதி கிடையாது.



ரூ.75 திட்டத்தில் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதன்  3GB டேட்டா கிடைத்தது. தற்பொழுது இரட்டிப்பு சலுகையின் மூலம் 6GB டேட்டாவை பெற முடியும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ.125 திட்டத்தின் மூலம் இலவச அழைப்புகளை ஏற்கும் வசதி மற்றும்  நாள் ஒன்றுக்கு 0.5 GB டேட்டா கிடைத்தது. தற்போது 1GB அளவிலான டேட்டாவை இரட்டிப்பு சலுகைகள் வழங்குகிறது.  இதன் வேலிடிட்டி 28 நாட்கள் .


ரூ .155 திட்டத்தின் கீழ் அன்லிமிட்டட் அழைப்புகளை ஏற்கும் வசதியும் நாள் ஒன்றுக்கு  1 GB  அளவிலான டேட்டாவும் கிடைத்தது. தற்போது அது இரட்டிப்பாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 155 ரூபாய்க்கு நாள் ஒன்றுக்கு 2 GB அளவிலான டேட்டா சலுகைகள் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.


ரூ.185 மூலம் நாள் ஒன்றுக்கு 2  GB அளவிலான டேட்டா கிடைத்தது. மேலும் அன்லிமிட்டட்  அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். தற்போது டேட்டா சலுகைகள் இரட்டிப்பாக கிடைக்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 4 GB அளவிலான டேட்டா கிடைக்கிறது. இது ஒரு சிறந்த ஆஃபராக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.