வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் படம் மாநாடு. கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாநாடுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் சிம்பு, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, சுரேஷ் காமாட்சி, எஸ். ஏ. சந்திரசேகர், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, “எப்பவும் பார்க்குற சிம்புவ இப்படத்தில் பார்க்க முடியாது. வேறொரு சிம்புவை பார்க்கலாம். எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிம்புவுக்கு நடக்கும் ஒரு விளையாட்டுதான் இப்படத்தில் அதிகம் இருக்கும். இதற்கு நடுவில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் வருவார்கள். நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மாநாடு உருவாகி இருக்கிறது” என்றார்.
முன்னதாக மாநாடு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மெஹரசைலா என்ற சிங்கிள் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. யுவன் இசையில் மதன் கார்க்கி எழுதியிருந்த இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இதுவரை சிம்புவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த அத்தனை படங்களும் ஆல்பம் ஹிட் என்பதால் மாநாடு பட பாடல்களும் அந்த வரிசையில் இணையும் என யுவன் மற்றும் சிம்புவின் ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Bharathiraja Speech: ‛சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை’ கலாய்த்தாரா... பாராட்டினாரா பாரதிராஜா?
Watch Video | பிரச்சனை கொடுக்குறாங்க... மாநாடு திரைப்பட விழா மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு!
பாபா முதல் ஜெய்பீம் வரை.. அரசியல் தலைவர்களால் அழுத்தங்களை சந்தித்த நடிகர்கள்.. !
HBD Nayanthara | உழைப்பை நம்பிய நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டாரின் டாப் 5 ரோல்ஸ்..