HBD Nayanthara | உழைப்பை நம்பிய நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டாரின் டாப் 5 ரோல்ஸ்..!

நயனின் நடிப்பில் தவறவிடக்கூடாத 5 முக்கிய படங்களை பார்க்கலாம்.

Continues below advertisement

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாத்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் நயன் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டவர். ரொமான்ஸ், கவர்ச்சி என வழக்கமான பார்முலாவிலேயே நயன் தொடங்கி இருந்தாலும் குறிப்பிட்ட படங்களுக்கு பிறகு படத்தை தாங்கிச் செல்லும் கதாபாத்திரங்களையே கையில் எடுத்தார்.

Continues below advertisement

நாயகியை மையமாகக் கொண்டே நகரும் படங்களை டிக் செய்தார் நயன். அதேவேளையில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேரும்போது மட்டும் சறுக்கவே செய்தார். விஜயின் பிகில், ரஜினியின் அண்ணாத்தே படங்களில் நயனுக்கு பெரிய வாய்ப்பு இல்லையென்றே கூறலாம். இந்நிலையில் நயனின் நடிப்பில் தவறவிடக்கூடாத 5 முக்கிய படங்களை பார்க்கலாம்.

1.அறம்



மாவட்ட ஆட்சியராக நயன் மிரட்டிய திரைப்படம்தான் அறம். மாஸ் லுக், கெத்து நடை, அரசு அதிகாரிக்கான மிடுக்கு என அறம் படம் நயன் திரையுலகில் மிக முக்கிய இடத்தில் இருக்கும். கோபி நயினார் இயக்கிய இப்படம் ஆழ்துளைகிணற்றில் குழந்தை விழுவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தப்படத்துக்காக சில விருதுகளையும் அவர் வென்றார்

2.கோலமாவு கோகிலா



நெல்சன் இயக்கத்தில் நயன் நடித்த திரைப்படம் கோலமாவு கோகிலா. பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அதிரடி காட்டு நாயகியாக நயன்தாரா நடித்திருப்பார். யோகிபாபுவுடன் இணைந்து நயன் தாரா காமெடி ட்ராக்கை பிடித்து பின்னி பெடலெடுத்திருப்பார்.

3.நானும் ரெளடிதான்



க்யூட் பெண்ணாக க்யூட் ரியாக்‌ஷன்களால் ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ரானும் ரெளடிதான். செவித்திறன் குறைபாடுடைய பெண்ணாக நடித்திருப்பார் நயன். அப்பாவின் இறப்புக்கு பழிவாங்க ஹீரோ விஜய் சேதுபதியுடன் இணைந்து பயணிப்பதே நானும் ரெளடி தான். காமெடி, காதல் என இப்படத்தில் மாஸ் செய்திருப்பார் நயன் தாரா.

4.மாயா



த்ரில்லர் ட்ராமாவாக உருவாக்கப்பட்ட மாயா திரைப்படத்தில் 2 வேடங்களில் நயன் நடித்திருப்பார். இது நயன்தாராவின் 50-வது படமும் கூட.  பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இது. தன்னுடைய நச் நடிப்பின் மூலம் படத்துக்கு பெரிய பலமாக இருப்பார். 

5.மூக்குத்தி அம்மன்



பல்வேறு வேடங்களில் நடித்திருந்த நயன், கையில் சூலத்துடன் அம்மன் வேடம் எடுத்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் காமெடி கலந்து அரசியல், நிகழ்கால பிரச்னைகளை பேசியது. காமெடி, பாசம் என பலதரப்பட்ட உணர்வுகளை தாங்கிச்செல்லும் இப்படம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola