தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சிம்பு(Simbu). இவரது தந்தையும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமானவர் டி.ராஜேந்திரன். ரசிகர்களால் அன்புடன் டி.ஆர். என்று அழைக்கப்படும் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தற்போது, உடல்நலம் தேறியுள்ள அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பேப்பர் ராக்கெட் எனும் படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் சிம்பு பங்கேற்று பேசியதாவது, “ அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கும், உதய் அண்ணாவுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




உதய் அண்ணா யார் என்ன உதவி கேட்டாலும் செய்கிறார் என்று நான் கேள்விபட்டுள்ளேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது எதுவென்றால், நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவரை எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. மேலும், அந்த விஷயத்தையும் கடைசி வரை பின்பற்றுவதும் மிகப்பெரிய விஷயம், மிக்க நன்றி அண்ணா.


கிருத்திகா மேடமிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவர்களுடன் ஒரு படம் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனக்கு ஆண் டைரக்டர், பெண் டைரக்டர் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. அனைவருமே இயக்குனர்கள்தான். கிருத்திகா மேடமிற்கு உண்டான இடம் ஏற்கனவே உண்டு.




கிருத்திகா மேடம் பொழுதுபோக்கிற்காக படம் செய்கிறீர்களா? அல்லது முழுவீச்சில் சீரியசாக படம் செய்கிறாரா? என்ற சந்தேகம் மட்டும் இருந்தது. அப்போதுதான் தெரிந்தது. அவ்வளவு உழைப்பை போட்டுள்ளார். பார்க்கும்போதுதான் பெருமையாகவும் இருந்தது மற்றும் ஆச்சரியமாகவும் இருந்தது. நமது முன்னோர் நெகட்டிவ்வான விஷயங்களை கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் பாசிட்டிவான விஷயங்கள் இந்த படத்தில் உள்ளது.”


என்று பேசியுள்ளார்.


அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த நிலையில் டி.ராஜேந்திரன் நாளை சென்னை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Rekha Nair: என்ன பத்தி பேசுவியா? செருப்பு பிஞ்சிரும்.. பயில்வான் ரங்கநாதனை புரட்டி எடுத்த ரேகா


மேலும் படிக்க : உள்ளாடை சைஸ்.. அடுத்தடுத்து ஆபாசமாக கேள்வி கேட்ட நபர்… பளீரென பதிலடி கொடுத்த நீலிமா ராணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண