நீலிமா ராணி பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடிகையாகவும், டப்பிங் கலைஞராகவும் இயங்கி வரும் பிரபலம் ஆவார். உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் 2008 இல் தனது காதலரான இசைவாணனுடன் திருமண வாழ்க்கையில் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் நீலிமா - இசைவணன் தனது இரண்டாவது மகளை பெற்றெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






நடித்த திரைப்படங்கள்


துணை கதாபாத்திரத்தில் நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம்,திமிரு, பாண்டவர் பூமி, உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரிய திரையில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் சின்னத்தரையில் மெட்டி ஒலி, ஆசை, வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: கலவரமாக மாறிய சிறுவர்களின் ப்ரீ பையர் கேம்... 5 பேருக்கு வெட்டு.. தேவாலயம் மீது கற்கள் வீச்சு!


ரசிகர்களின் கேள்விக்கு பதில்


ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களை தயாரிக்கும் அவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார். நீலிமா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராமில் தனது பாலோயர்களுடன் உரையாடினார். சில நெட்டிசன்கள் அவரது கேள்வி பதில் அமர்வின் போது ஆபாசமான கேள்விகளை கேட்டனர். ஆனால் அதற்கு நீலிமா தைரியமாக பதிலளித்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தார். இணையவாசிகள் இதுபோன்று பிரபலங்கள், பெண் நடிகர்களிடம் தகாத கருத்துக்களை பேசுவது அதிகரித்து வருகிறது.






ஆபாச கேள்விகள்


நீலிமா அவரிடம் கேட்கப்பட்ட ஆபாச கேள்விகள் கண்டு வெகுண்டு எழுந்துள்ளார். ஒருவர் அவருடைய உள்ளாடை அளவு கேட்டபோது, "அதை ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும் நீ என்ன உள்ளாடை வியாபாரியா?" என்று அதிரடியாக பதிலளித்திருந்தார். ஒருவர் உங்களுக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் என்ன என்று கேட்க, "இந்த முட்டாள்களுக்கு எப்படி பதில் சொல்வது?" என்று திட்டி இருந்தார்.


சமூக வலைதளங்கள் வளர வளர பிரபலங்களிடம், குறிப்பாக பெண்களிடம் இது போன்ற செயல்கள் செய்வது அதிகரித்து வருகிறது. பலர் இதற்கு பதிலளிக்கவில்லை என்றாலும் எல்லோர் மனதையும் நேரடியாக பாதிக்கும் விஷயம் தான் இது. ஆனால் அதனை திறமையாக கையாண்ட நீலிமாவுக்கு பலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.