அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


79 வயதாகும் ஜோ பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


தனிமைப்படுத்திக்கொண்டு அலுவல் பணிகள்


இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஜோ பைடன், தன் அலுவல் பணிகளை கொரோனா தனிமைக்காலத்திலும் தொடர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


 






முன்னதாக ஜோ பைடனுக்கு நேற்று முன் தினம் (ஜூலை.19) கொரோனா சோதனை செய்தபோது தொற்று இல்லை என முடிவுகள் வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


புற்றுநோய் இருப்பதாகக் கூறிய ஜோ பைடன்


கொரோனா தடுப்பூசியையும் தொடர்ந்து இரண்டு பூஸ்டர் தடுப்பூசிகளையும் ஜோ பைடன் ஏற்கெனவே செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



முன்னதாக ஜோ பைடன், தனக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.




 


இதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனக்கு சிறுவயதில் ஆஸ்துமா இருந்ததாக ஜோ பைடன் தெரிவிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண