நடிகை ரேகா நாயரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனும் சண்டைப் போட்டுக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேகா நாயர் அண்மையில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான  ‘இரவின் நிழல்’ படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இந்தக்காட்சி குறித்து திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அது குறித்து தவறான வகையில் விமர்சித்ததாகத் தெரிகிறது.




இந்த நிலையில் இன்று திருவான்மியூர் கடற்கரை அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனிடம், ரேகா நாயர் அது குறித்து வினவினார். கொஞ்ச நேரத்தில் அது விவாதமாக மாறியது. தொடர்ந்து ஏன் அவ்வாறு பேசினீர்கள், உங்களுக்கு என்னை விமர்சனம் செய்ய என்ன உரிமை இருக்கிறது என்று ரேகா கேட்க, நிர்வாணமாக நடித்தால் அப்படித்தான் பேசினேன் என்கிறார் பயில்வான் ரங்கன்.


கைகலப்பாக மாறிய விவாதம் 


இந்த விவாதம் கைக்கலப்பாகவும் மாறியது. இந்தச்சண்டை குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன் , “ கடற்கரையில் ரேகா நான் நிர்வாணமாகத்தான் நடிப்பேன் என்றார். ஆடையை அவிழ்த்து காட்ட முயன்றார். உடனே நான் காவல்நிலையம் செல்வோம் என்றேன். உடனே அவர் அங்கிருந்து சென்று விட்டார்.” என்று கூறினார்.




ரேகா நாயர் பேசும் போது, “ நான் அங்கு பெரிதாக செல்வதில்லை. இன்று ஏதேச்சையாக அந்த வழியாக சென்றேன். அப்போது அவர் என்னைப்பற்றி பேசியது குறித்து கேட்டேன். அப்போதுதான் அது விவாதமானது.


அவர் அப்படி வாய்க்கு வந்த படியெல்லாம் பேசலாமா.. நான் அந்தப்படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேனா..  நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் அவருக்கு என்ன அதில் அக்கறை.. அப்படியே நடித்திருந்தாலும் அவர் பேச என்ன தகுதி இருக்கிறது. நான் அவரது மனைவியா.. இல்லை மகளா.. அதனால் தான் அவரிடன் சண்டையிட்டு செருப்பு பிய்ந்துவிடும் என்று சொல்லி விட்டு வந்தேன்” என்றார்.