சித்தார்த் நடிப்பில் கடந்த 28ஆம் தேதி திரைக்கு வந்த சித்தா படம் ஓடிடியில் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள சித்தா படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். படத்திற்கு திபு நினன் இசை அமைத்துள்ளார். 


பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை மற்றும் சீண்டல்களையும், அந்த சிறுமிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் பேசும் சித்தா படம் தியேட்டர்களில் அப்லாஸ்களை வாங்கிக் குவித்தது. தந்தையை இழந்த 8 வயது அண்ணன் மகள் மீது சித்தார்த் காட்டும் பாசமும், ஒரு கட்டத்தில் சித்தார்த்தையே தவறாக கருதும் சூழலும், பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் உணர்ச்சிகளையும் திரையில்  எதார்த்தமாக காட்டியிருப்பார் இயக்குநர் அருண்குமார். இயக்குநரின் மேக்கிங், சித்தார்த்தின் நடிப்பு என இரண்டும் இணைந்து படத்தை வெற்றிப்பெற செய்துள்ளன. 


சித்தா படத்துக்கு சாமானிய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரை பிரபலங்களும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன், சித்தா படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் அழுத்தம் ஏற்படுகிறது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உணர்வைத் தருகிறது. மகாநதி படத்தை விட இது நன்றாகவே உள்ளது என பாராட்டினார். இதேபோல் இயக்குநர் மணிரத்னமும் சித்தா படத்தை பாராட்டியுள்ளார். 


இதைபோல் விமர்சனத்திலும் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற சித்தா படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு இருப்பதால் சித்தா படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஆனால், ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிக தொகையைக் கொடுத்து சித்தா படத்தின் உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனால், ஆயுதபூஜைக்கு ஹாட்ஸ்டாரில் சித்தா படம் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சித்தா படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 


முன்னதாக சித்தா படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசிய சித்தார்த், தனது திரை வாழ்க்கை சித்தா படத்தில் நடித்ததன் மூலம் முழுமை அடைந்ததாகவும், ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இருப்பதாகவும் கூறியிருந்ததார். 


மேலும் படிக்க: Bhagavant Kesari : என்ன கொடும சரவணன் இது.. பாலையாவிற்கு காஜல் அகர்வால் ஆண்ட்டியா?


Leo box office collections Day 2: நெகட்டிவ் விமர்சனம்.. ஆனாலும் தட்டி தூக்கிய “லியோ” .. 2ஆம் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?