பாலையா


ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் மகன் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தெலுங்குத் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் நந்தி விருதை மூன்று முறை பெற்றுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா.


நரசிம்ம நாயுடு படத்திற்காக 2001ல், சிம்ஹா படத்திற்காக 2010ல் மற்றும் லெஜண்ட் படத்திற்காக 2014ம் ஆண்டும் சிறந்த நடிகருக்கான நந்தி விருது இவருக்கு  வழங்கப்பட்டுள்ளது . 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலகிருஷ்ணா  நடிப்பில் சமீபத்தில்  கோபிசந்த் மலினேனி இயக்கத்தில்  'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் வெளியானது.


சமூக சேவை


நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்  பாலையா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. பசவதாரகம் இந்தோ அமெரிக்கன் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஐதராபாத்தில் இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கூடத்தில் உள்ள பல நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகளை மேற்கொள்ள நடிகர் பாலகிருஷ்ணா உதவி செய்து வருகிறார்.


பகவந்த் கேசரி


தற்போது பாலையா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பகவந்த் கேசரி படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. காஜல் அகர்வால், ஸ்ரீலீலா , அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனில் ரவிபுடி இந்தப் படத்தை இயக்கி தமன் இசையமைத்துள்ளார். எப்படியாவது தன்னுடைய தங்கையை ஒரு போலீஸ் ஆபிஸராக்க வேண்டும் என்கிற குறிக்கோளில் இருக்கும் பாலையா அதற்கு எதிராக வரும் வில்லன்களை அடித்து துவம்சம் செய்கிறார். பாலையா ரசிகர்களுக்கு ஏற்றார்போல் ஆக்‌ஷன் கலந்த செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி இருக்கிறது பகவந்த் கேசரி.


லியோவுடன் போட்டி


பகவந்த் கேசரி படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் கிடத்திருந்தாலும் படத்தின் வசூலிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்துள்ளது அதே நாளில் வெளியான இரண்டு படங்கள். முதலாவதாக விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ திரைப்படம் ஆந்திர மாநிலத்தில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் பகவந்த் கேசரி படத்திற்கு செல்லும் கூட்டம் குறைந்துள்ளது. மேலும் ரவி தேஜா நடிப்பில் உருவாகி இருக்கும் டைகர் நாகேஷ்வர ராவ் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களுடன் போட்டி போட முடியாமல் தவிக்கிறது பகவந்த் கேசரி.


காஜல் அகர்வால் ஆண்டியா


இந்நிலையில் பகவந்த் கேசரி படத்தின் ஒரு காட்சி இணையதளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த காட்சியில் காஜல் அகர்வாலை பார்த்து பாலையா ஆண்ட்டி என்று அழைக்கிறார். இதனால் காஜல் அகர்வால் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். பாலையாவிற்கு 63 வயதாகும் நிலையில் காஜல் அகர்வால் 38 வயதை எட்டியுள்ளார். தன்னை விட 25 வயது குறைவானவரை பாலையா ஆண்ட்டி என்று அழைப்பது எல்லாம் காலக் கொடுமை என் காஜல் அகர்வாலின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்