Jawan box office collection: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் திரைக்கு வந்த மூன்றே நாட்களில் ரூ.500 கோடி வரை வசூலில் சாதனை படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலரும் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த கடந்த 7ம் தேதி திரைக்கு வந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடமாநிலங்களில் ஷாருக்கான் ரசிகர்கள் ஜவான் திரைப்படத்தை திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர்.
ஜவான் படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரூ.129 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.111 கோடியும் மூன்றாம் நாள் ரூ.144 கோடியும் என வசூலாகி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வார விடுமுறை என்பதால் கலெக்ஷனில் ஜவான் சாதனை படைத்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஜவான் படம் வெளியான மூன்றே நாளில் ரூ.520 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் ராஜா ராணி, கோலமாவு கோகிலா படங்களை எடுத்து பிரபலமான அட்லி இந்தியில் முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் ஜவான். முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்து அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் அட்லியின் இயக்கத்தை கோலிவுட் முதல் பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அட்லியை போல் நயன்தாராவும் முதன் முதலில் இந்தியில் அறிமுகமாகி இருப்பதாலும், முதல் படத்திலேயே ஆக்ஷன் காட்சிகளில் பிரமிப்பை அளித்துள்ளார். இதேபோன்று இசை மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி இருக்கும் அனிருத், பின்னணி இசையில் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். ஏற்கெனவே இந்தி வெப் சீரிச்களில் நடித்து வந்த விஜய்சேதுபதி ஷாருக்கானிற்கு வில்லனாக நடித்து ரசிக்க வைத்துள்ளார். இப்படி ஒவ்வொருவரும் தனக்கான பாணியில் சிறப்பாக செயல்பட்டு ஜவான் படத்தை வரலாறு படைக்க வைத்துள்ளனர்.