Rajinikanth Meets Malaysian PM : சூறாவளி சுற்றுப்பயணத்தில் ரஜினிகாந்த்.. மலேசிய பிரதமரை சந்தித்த காரணம் இதுதானா?
ஜெயிலர் படத்தின் ரிலீஸிற்கு முன்னும் பின்னும் நடிகர் ரஜினிகாந்த் பல இடங்களை சுற்றி வருகிறார்.
மாலத்தீவு, இமயமலை, உத்தர பிரதேசம், கர்நாடகாவிற்கு சென்ற இவர் தற்போது மலேசியா சென்றுள்ளார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இவர்கள் இருவரின் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், ரஜினி வெளியே நடந்து வரும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியதாவது, “இன்று ஆசியாவிலும் சர்வதேச சினிமா அளவிலும் புகழ்பெற்ற இந்திய நடிகரான ரஜினிகாந்தை சந்தித்தேன். கஷ்டப்படும் மக்களை பற்றி பேசியபோது, மரியாதை கொடுத்து கவனித்தார். நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம். இனி அவர் நடிக்கவிருக்கும் படங்களில் சமூதாயம் தொடர்பான கூறுகளை சேர்க்க கோரிக்கை விடுத்தேன். இந்த துறையில் ரஜினிகாந்த் மேன்மேலும் வளர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.”
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது