பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை மற்றும் திரைப்பட நடிகை என பல பரிமானங்களை கொண்டவர் நீலிமா ராணி. இவர் தமிழில் சிறிய வயது முதல் திரைப்படங்களில் கலக்கி வருகிறார். நான் மகான் அல்ல திரைப்படம், மெட்டி ஒலி சீரியல் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் தற்போது நீல்ஸ் என்ற யூடியூப் செனலை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். 


அந்தவகையில் தற்போது அவருடைய  யூடியூப் சேனலில் போடப்பட்டுள்ள வீடியோக்களுக்கு வந்துள்ள கமெண்ட்ஸ் சிலவற்றிற்கு பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ‘ரியாக்‌ஷன் டூ கமெண்ட்ஸ்’ என்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் சிலரின் எதிர்மறையான கமெண்ட்ஸிற்கு நல்ல முறையில் பதிலடி வழங்கியுள்ளார். அதன்படி ஒருவர் இவரின் மூக்கு குறித்து ஒருவர் சப்பமூக்கி என்று பதிவிட்டுள்ளார். அதற்கு நீலிமா, “என்னுடைய மூக்கு அப்படி இருப்பதற்கு நான் காரணமல்ல. இது பிறப்பிலேயே எனக்கு அமைந்தது. இந்த மூக்கை வைத்து கூட நான் இவ்வளவு தூரம் வெற்றிகரமாக பயணம் செய்துள்ளேன். அதற்காக என்னுடைய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். 




மற்றொருவர் இவருடைய பயண வீடியோவை பார்த்துவிட்டு அதில், “நீ இங்க என்னடி பண்ணிட்டு இருக்க” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு,“நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் யார் என்று தெரியாத ஒரு பெண்ணை ‘டி’ போட்டு கூப்பிடுவது தவறு. நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள பெண்களையும் அப்படி தான் அழைப்பீர்கள் என்றால் அது தவறு அதை நிச்சயம் திருத்தி கொள்ளுங்கள்” எனக் கூறினார்.  மேலும் ஒருவர் நீங்கள் குடிப்பீங்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு, “நான் அதிகம் குடிப்பேன். அதிகமாக தண்ணீர் மற்றும் ஜூஸ் குடிப்பேன். குடிப்பது என்பது ஒருவருடைய தனிப்பட விஷயம் அதை நீங்கள்  பொதுவெளியில் கேட்பது தவறு. குடிப்பழக்கம் எப்போதும் குடும்பத்திற்கு கேடு விளைவிக்கும்” எனக் கூறினார். 


‛நொந்து போன எங்களை நோண்டாதீங்கடா...’ தல ரசிகர்களை வெறுப்பேற்றும் போலி வலிமை அப்டேட்!


மற்றொரு நபர் நீங்கள் பிராமணரா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு, “நான் மதத்தை விரும்பம் நபர் அல்ல. ஆன்மீகத்தை மட்டுமே விரும்புவேன். என்னுடைய தாய் தந்தை பிராமணர்கள். ஆனால் அதற்காக நான் மற்ற மதங்களை மதிக்காத பெண் அல்ல. எல்லா மதங்களையும் நன்கு மதிக்க தெரிந்த நபர் நான்” எனப் பதிலளித்துள்ளார். 




மேலும் ஒருவர் உங்களுடைய பேச்சில் அலட்டல் அதிகமாக உள்ளது. அதை குறைத்து நேச்சுரலாக பேசுங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு அவர், “நான் எப்போதும் வீட்டில் எப்படி இருப்பேனோ அப்படி தான் பேசுகிறேன். அது உங்களுக்கு அலெட்டலாக இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. நேச்சுரல் என்றால் என்ன?” என வினவியுள்ளார். அத்துடன் ஒரு நபர் வீடியோவிற்கு டிஸ்லைக் போட்டாச்சு என்பதை கமெண்டாக பதிவிட்டிருந்தார். அந்த நபரை, டிஸ்லைக் பட்டன் இருக்கும் போதே நீங்கள் டிஸ்லை போட்டாச்சு என்று கமெண்ட் செய்வதற்கு பெரிய பாராட்டு” என்று கூறி பாராட்டியுள்ளார். 


 


மேலும் படிக்க:‛சர்கார் பார்த்தாச்சு... சர்தார் பாக்கணுமே....’ ஜூலை 10ல் மீண்டும் துவக்கம்!