தன்னை அழகுபடுத்தி கொள்ளவும், இருக்கும்  அழகை மேலும் மெருகூட்டவும் அதிக மெனக்கெட வேண்டும் மற்றும் அதிக செலவாகும் என நம்மில்  நிறைய பேர் நம்பி கொண்டு இருப்போம். ஆனால் உண்மை அது இல்லை. எளிமையாக வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து நமக்கு பிடித்தார் போல் அழகு படுத்தி கொள்ளலாம்


தேவையான பொருள்கள் அவற்றை  ஒரு முறை வாங்கினால் மீண்டும் பயன்படுத்தி கொள்ள முடியும். நெயில் பாலிஷ் ரிமூவர். நெயில் பாலிஸ், நெயில் கட்டர், க்யூட்டிகல் புஷர் மற்றும் நிப்பர், க்யூட்டிகல் ரிமூவர் அல்லது க்யூட்டிகல் கிரீம், மாய்ஸ்சரைசர், காட்டன்



  • முதலில் பழைய நெயில் பாலிஷை சுத்தம் செய்ய வேண்டும். ரிமூவர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

  • பிடித்தார் போல் நெயில் வடிவமைத்து கொள்ளலாம். நகத்தை அளவாக வளர்த்து பிடித்தது போல் வடிவமைத்து கொள்ளலாம். நகத்தின் உள் பகுதி சுத்தமாக இருப்பது அவசியம்

  • ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு வெதுவெதுப்பான நீரை வைத்து சோப்பு  சேர்த்து,கையை அதில் 3-5 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். விரலில் இருக்கும் அழுக்குகள் இறந்த  செல்கள் அனைத்தும் நீரில் கழுவி கொள்ளவும்.

  • க்யூட்டிகல் கிரீம் தடவி விரல்களுக்கு மசாஜ் செய்யலாம். இது புறத்தோல்களை சுத்தம் செய்ய உதவும்.

  • மாய்ஸ்சரைசர் கொண்டு கைகளுக்கு மசாஜ் செய்து கைகளை ஈரப்பதத்துடன்வைத்து கொள்ளவும். கைகளை சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.

  • காட்டன் கொண்டு நகத்தின் மேல் இருக்கும் கிரீம் கைகளை துடைத்து எடுத்து நகத்தை அலங்கரிக்க தயார் படுத்தவும்.

  • முதலில் ஒரு கோட் ட்ரான்ஸ்பரண்ட் கோட்டிங் செய்து கொள்ளவும். இது நகத்தில் வேறு நிறங்களின் சாயம் ஒட்டாமல் பார்த்து கொள்ளும் இந்த கோட்டிங் நன்றாக உலர விட வேண்டும்.

  • அடுத்து அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற நிறங்களில் அடுத்த கோட் நெயில் பாலிஷ் போட்டு கொள்ளலாம்.

  • அதற்க்கு மேல் மறுபடியும் ட்ரான்ஸ்பரண்ட் கோட்டிங் கொடுத்து அழகு படுத்தலாம். இது நெயில் பாலிஷ் ஷைனிங் ஆக தெரியும்


வீட்டில் மேனிகியூர் செய்யும் போது தெரியாமல் நடக்கும் தவறுகள்!



  • நகங்களை எப்போதும் வெட்ட கூடாது. தேவைக்கு ஏற்ப ட்ரிம் செய்து வடிவமைத்து கொள்ளலாம்

  • நெயில் பாலிஷ் தடவும் மேலும் மேலும் கீழும் இரண்டு பக்கமும் தடவ கூடாது. ஒரே பக்கமாக தடவ வேண்டும்.

  • ஒவ்வொரு முறைக்கு தேவையான நேரம் கொடுக்க வேண்டும். ஒரு கோட்டிங் காய்ந்த பிறகு அடுத்த கோட்டிங் கொடுக்க வேண்டும்.

  • நெயில் பாலிஷ் தவுவதற்கு முன் கைகளை சுத்தமாகி கொள்ள வேண்டும்.