Daiji FirstLook: நடிகர் ரமேஷ் அரவிந்தின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிக்கும் ‘டைஜி’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோமாளி போன்ற வித்யாசமான தோற்றத்தால் கவனத்தை ஈர்த்துள்ளார் ரமேஷ் அரவிந்த்.


தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் அரவிந்த். சுஹாசினி நடித்த ‘மனதில் உறுதி வேண்டும்’,  உன்னால் முடியும் தம்பி, டூயட், பாட்டு வாத்தியார், பஞ்சதந்திரம், உத்தம வில்லன் உள்ளிட்ட தமிழ் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களைப் பெற்றவர் ரமேஷ் அரவிந்த். கமல் நடிப்பில் வெளிவந்த உத்தம வில்லன் படத்தில் இயக்குநராகவும் பணிபுரிந்து உள்ளார். 


கன்னட படங்களில் அதிகம் நடித்து வந்த இவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என சினிமாவில் பன்முகத் திறமையானவராக வலம் வருகிறார். ஏழு படங்களை இயக்கியுள்ள இவர், 6 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். கமல்ஹாசன், சிம்ரன், ரம்யாகிருஷ்ணன், மணிவண்ணன் கூட்டணியில் காமெடியில் பிளாக்பஸ்டர் மூவியாக வெளிவந்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ரமேஷ் அரவிந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். ஜோடி படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். 


இந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை ஒட்டி ரமேஷ் அரவிந்த் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகாஷ் ஸ்ரீவஸ்டா இயக்கியுள்ள டைஜி என்ற கன்னட படத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்துள்ளார். கோமாளி தோற்றத்தில் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் ரமேஷ் அரவிந்த் கவனத்தை ஈர்த்துள்ளார். இதில் ஹீரோவாக  ரமேஷ் அரவிந்த் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இயக்குநர் ஆகாஷ் ஸ்ரீவஸ்டாவுடன் இணைந்து இரு படங்களில் நடித்த ரமேஷ் அரவிந்த், டைஜி படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். 






மேலும் படிக்க: G Marimuthu: "கலை ஆர்வத்தால் படிப்பை கைவிட்டார்” - மனம் திறந்த நடிகர் மாரிமுத்துவின் பள்ளி ஆசிரியர்கள்


Neeya Naana: மார்பகங்கள் கூட பிரச்னையா? ஒரு நொடி ஷாக்கான கோபிநாத்... நீயா நானாவில் காரசார விவாதம்!