நீயா? நானா?


பிக்பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது.


வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.


அந்த வகையில், இந்த வாரம்  ’பியூட்டி கிளினிக்கை ஆதரிப்பவர்கள்' மற்றும் ’பியூட்டி கிளினிக்கை விமர்சிப்பவர்கள்’என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. முன்னதாக, சினிமா பிரபலங்கள் மட்டும பியூட்டி கிளினிக்கு சென்று உடல் அமைப்பை தங்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொண்டு வந்தனர். ஆனால் தற்போது, நடுத்தர வர்க்கத்தினரும் பியூட்டி கிளினிக்கை நாட தொடங்கிவிட்டனர். இதனை ஒரு தரப்பினர் ஆதரித்தாலும், பலரும் விமர்ச்சித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று நடந்த நீயா நானாவில் காரசாரமான விவாதம் நடந்தது.


ஷாக்கான கோபிநாத்:


அழகை மேம்படுத்த நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்? என்று கோபிநாத் பியூட்டி கிளினிக்கை ஆதரிப்பவர்கள் தரப்பில் கேள்வியை முன்வைத்தார். இதற்கு, "Laser Hair Removal, முகம், கை, கால் போன்ற இடங்களில் முடிகளை அகற்றுவது, உதட்டின் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றுவது, உதட்டின் வடிவமைப்பை மாற்றுவது (Lip Augmentation), புருவங்களை (eyebrow transplants) அடர்த்தியாக மாற்றுவது,  முக வடிவமைப்புகளை மாற்றுவது, தளர்ந்த மார்பகங்களை உறுதியாக்கவது (Breast Lifting), மூக்கின் வடிவமைப்பை மாற்றுவது போன்றவற்றை செய்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.


இதனைக் கேட்டு ஷாக்கான கோபிநாத், “இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் செய்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ஒரு பெண், "எங்களை மாற்றிக் கொள்ளவும், எங்களுக்கு கூடுதல் அழகு வேண்டும் என்பதற்காகவும் செய்து கொள்கிறோம். நாங்கள் Full body Laser Hair Removal செய்வதற்கு ஒரு செஷனுக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்கிறோம். முடி இருப்பது எங்களுக்கு சுகாதாரமற்றதாகத் தெரிகிறது” என்று கூறினார்.


கடுப்பான கோபிநாத்:


இதற்கு கடுப்பான கோபிநாத், “உடலில் முடி இருப்பது சுகாதாரமற்றது என்று எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ஒரு பெண், "20 ஆண்டுகளுக்கு முன்பும் சுகாதாரமற்றதாக தான் இருந்திருக்கும். ஆனால் அப்போதும் எதுவும் வெளியே தெரியவில்லை. இப்போ இருக்கிற நவீன காலத்தில் அனைத்துமே எல்லாருக்கும் தெரியவருகிறது.


அதாவது, முடி அதிகமாக இருந்தால்,  வியர்வை அதிகமாக வரும். அப்படி வியர்வை வரும்போது நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார். இதற்கு எதிர்தரப்பில் இருக்கும் ஒரு பெண், "இயல்பாக நம்ம உடலில் நடப்பதை மிகைப்படுத்தி  பேசுகின்றனர்” என்று தெரிவித்தார்.