16 கிலோ எடையை 50 நாளில் குறைத்த ஆலியா மானசா...ரசிகர்களுக்கு சொன்ன டிப்ஸ்...
50 நாளில் 16 கிலோ உடல் எடையை குறைத்துள்ள ஆலியா மானசா, உடல் எடையை குறைக்க ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஆல்யா மானசா ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்து வந்தார்.
ஆலியா அந்த தொடரில் நடித்து வந்த போதே மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.
இரண்டாவது குழந்தைக்கு பின் உடல் எடை அவருக்கு அதிகமாக கூடியது. மேலும் முதல் பிரசவத்திற்கு பின் கூடியதை விட இரண்டாவது பிரசவத்தின் போது உடல் எடை அதிகமாக கூடியதாக ஆலியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் 50 நாளில் 16 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறார். உடல் எடையை குறைக்க பொதுவாக அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளையே அவரும் மேற்கொண்டுள்ளார். ஆனால், தன்னால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் அவர் இந்த முயற்சியில் இறங்கியதால் அவரால் சீக்கிரமாகவே உடல் எடையை குறைக்க முடிந்ததாக கூறியுள்ளார்.
ரன்னிங் , வாங்கிக் செல்வது, உடற்பயிற்சி செய்வது, தினமும் காலையில் எழுந்தவுடன் சீரகத்தண்ணீர் மற்றும் தேன் கலத்த சுடுதண்ணீர் குடிப்பதால் பெருமளவு உடல் எடையை குறைக்க முடியும் என்று ஆலியா மனசா டிப்ஸ் கொடுத்துள்ளார்.
பிரசவத்திற்கு பின் உடல் எடை கூடுவது பெண்களுக்கு பொதுவானதாக உள்ளது. ஒரு சில சினிமா சின்னத்திரை நடிகைகள் கூட பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க முடியாமல் சிறமத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் ஆலியா மானசா பிரவத்திற்கு பின் கூடிய அதிகப்படியான உடல் எடையை கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் குறைத்துள்ளதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Just In
மேலும் படிக்க
Ennore Oil Spill: கச்சா எண்ணெயை அகற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு