இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். பிரபுதேவா நடன அமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும்கூட. அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ்,  ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.


தமிழில் அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சமீபத்தில் அவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் வெளியானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


இதற்கிடையே உதவி நடன அமைப்பாளராக இருந்தபோதே பழக்கமான ஹரிகுமாரின் இயக்கத்தில் தேள் என்ற படத்திலும் பிரபுதேவா கமிட்டானார். ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 




தாய்க்கும் மகனுக்கும் இடையேயான உறவை வைத்து தயாராகியிருக்கும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ் தாயாகவும், பிரபுதேவா அவருக்கு மகனாகவும் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் தேள் படம்  பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை பிரபுதேவாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


தேள் படம் மட்டுமின்றி,  ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கார்பன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘நாய் சேகர்’, ‘ஐஸ்வர்யா முருகன்’ உள்ளிட்ட திரைப்படங்களும் பொங்கலையொட்டி வெளியாகின்றன.






முன்னதாக,   பிரபுதேவா நடிப்பில்‘பஹீரா’, ‘மை டியர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.  மேலும், ஐஸ்வர்யா ராஜேஷுடன் புதிய படத்திலும், பா.விஜய் இயக்கத்தில் பெயரிடாத படத்திலும் பிரபுதேவா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Siddharth Controversy | "என் மகள் இந்தியாவுக்காக மெடல்களை குவிச்சாங்க.. அவர் என்ன பண்ணார்?” - விளாசிய சாய்னா நேவாலின் தந்தை


Watch Video | இப்படி பண்ணுங்க பாக்கலாம் - ரசிகர்களுக்கு சேலஞ்ச் கொடுத்த சமந்தா!


Vanjam Theerthayada | ”ஊருணி நீரைப்போல் இளையராஜாவின் இசையை பருகினேன்” இசைஞானியுடன் இணையும் சுசிகணேசன்