இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேசன் விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார், திருட்டுப் பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் திருட்டுப் பயலே பலரது வரவேற்பை பெற்றது. சுசி இறுதியாக 2017ஆம் ஆண்டு  பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உள்ளிட்டோர் வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படத்தை இயக்கியிருந்தார்.


சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை சுசி கணேசன் வெளியிட்டிருந்தார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


இந்நிலையில் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவை சுசி கணேசன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் சுசி கணேசன் இணையவுள்ளார். இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னை வந்து இளையராஜாவைச் சந்தித்துப் பேசி இளையராஜாவுக்கான முன் பணத்தையும் கொடுத்திருக்கிறார்.






இதுகுறித்து சுசி கணேசன் கூறுகையில், “கிராமத்து வாழ்க்கையில் ஊருணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப்போல இளையராஜாவின் இசையையும் உணவாக உண்டு வளர்ந்தவன் என்ற முறையில் எனது ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு அவர் இசையமைப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.


என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று நான் கண்ட கனவு தற்போது நான் முதன்முதலாகத் தயாரிக்கும் படத்தில் நிறைவேறியுள்ளது. இப்படம் 1980களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது” என்றார்.


இது தொடர்பாக சுசிகணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளையராஜா சாருடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Ajith 61 | அஜித் வில்லனா? டபுள் ரோலா? ஷூட்டிங் எப்போ? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் AK 61 அப்டேட்ஸ்..