விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் முக்கியமான தொடர் பாண்டியன் ஸ்டோர். நடுத்தர குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்களை பற்றி பேசுவதால் இந்த தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது முல்லையின் மருத்துவ செலவு குறித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. முல்லையின் மருத்துவ செலவுக்காக ரூபாய் 5 லட்சம் வரை மிகஷம் கஷ்டப்பட்டு திரட்டிய நிலையில் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. டி.ஆர்.பி. ரேட்டிங் சறுக்கிய நிலையில் இயக்குனர் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்குள்ளே பணத்தை விளையாட விட்டு ரசிகர்களை தன்வசம் இழுக்க முயற்சித்துள்ளார்.
முல்லைக்கு குழந்தை பிறக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், முல்லை மனம் உடைகிறார், வீட்டிற்கு வரும் முல்லையை அனைவரும் சமாதானப்படுத்துகின்றனர். முல்லைக்கு கண்ணன், கயல், பாண்டியன் என அனைவரும் சமாதானம் செய்கின்றனர். முல்லை மன வேதனையிலே தனது அறைக்கு சென்றுவிட ஜீவா மீண்டும் முல்லையின் ட்ரீட்மெண்ட் பற்றி பேசுகிறார்.
அப்போது, ஏற்கனவே 5 லட்சம் கடன் வாங்கியாச்சு. இதற்கு மேல் கடன் வாங்க முடியாது என்று மீனா சொல்ல, ஐஸ்வர்யாவும் அவருக்கு ஆதரவுக்குரல் கொடுக்கிறார். இதை கதிர் கேட்டு விடுகிறார். தனது மனைவியின் மருத்துவ செலவுக்கு தனது குடும்பத்தில் இருப்பவர்களே கணக்கு பார்க்கிறார்களே என்று வேதனை அடைகிறார். ஆனால், மூர்த்தியும், தனமும் பணமெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை என்று முல்லைக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
இதனால், முல்லையின் மருத்துவ செலவால் குடும்பத்தில் ஏற்படப்போகும் அடுத்த பிரச்சினைகள் என்ன? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மேலும் படிக்க : ”அரசியலுக்கு போனா பொய் சொல்லணும்” என்ற சிவகார்த்திகேயன்! - அதிர்ச்சியடைந்த உதயநிதி !
மேலும் படிக்க : KGF actor death: கேஜிஎஃப் நடிகர் பெங்களூருவில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்