கேஜிஎஃப் 1,2 படங்களில் நடித்தவரும் கன்னட நடிகருமான மோகன் ஜூனேஜா இன்று காலை மரணமடைந்தார். 54 வயதான அவர், பல ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் அவர் உயிரிழந்திருக்கிறார். 


யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. கே.ஜி.எஃப் 1 பாகம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இராண்டாம் பாகமானா இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்த நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.


ஜேஜிஎஃப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தனியாக கவனிக்க வைத்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களது கதாப்பாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,  கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாயின் பெருமைகளை பேசும் கதாப்பாத்திரங்களில், பத்திரிக்கையாளரிடம் பழைய கதையை சொல்லும் கதப்பாத்திரத்தில் மோகன் ஜூனேஜா என்பவர் நடித்திருப்பார்.


அவர், பல கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். உடல்நல குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 






100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அவர், சாண்டில்வுட்டில் கவனிக்க வைத்த காமெடி நடிகராக வலம் வந்திருக்கிறார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தும்கூரில் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக, ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்த தகவலை படத்தை தயாரித்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண