நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் டான். டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து லைகா புரொடக்ஷன்சுடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.மேலும் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். சிவக்கார்த்திகேயன் ஸ்டூடண்டாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியதாவது : ”டாக்டர் திரைப்படத்திற்கு கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. டான் திரைப்படம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் கதை . உங்களுடைய கதை. அதை இயக்குநர் படமாக்கனும்னு நினைத்ததற்கு முதலில் நன்றி. படத்தில் சமுத்திரக்கனி சாருக்கு ஒரு ஆழமான கதாபாத்திரம். அவர் எப்போதுமே நான் துவண்ட சமயத்தில் தம்பி வாடா..வெல்வோம் அப்படினு ஆறுதலாக இருந்தாரு. டிரைலரில் ஒரு டயலாக் வரும் “ பேசாமல் நாம அரசியலுக்கு போயிடுவோமா ?.. “அங்கே பொய்யல்லாம் பேசனும்பா என்றதும், உடனே உதயநிதி சார் என்னை பார்த்தாரு.
அந்த டயலாக்கை சிபி வைக்காம இருந்திருக்கலாம். ஆனாலும் உதயநிதி சார் அதை ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டாரு. நன்றி சார். நான் கல்லூரி காலங்களில் எஸ்.ஜே.சூர்யா சாருடைய வாய்ஸ்ல பேசுவேன். நிறைய பேர் என்னிடம் கேட்பாங்க அந்த வாய்ஸ் பண்ண சொல்லி, நான் எஸ்.ஜே.சூர்யா சார்க்கிட்ட சொல்லும் பொழுது , அவர் ரொம்ப சந்தோசப்பட்டாரு. அவர் வாய்ஸ் எடுத்து பண்ண நான் , அவர் கூடவே நடித்தது அவ்வளவு சந்தோசம். அவர்க்கிட்ட அவ்வளவு எனர்ஜி இருக்கும்.
ஷிவாங்கி எப்போதும் ஒரே மாதிரிதான்.படத்துக்கு முன்னால ஒரு மாதிரி , பின்னால ஒரு மாதிரி கிடையாது.அனிருத் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் , அவர் கொடுக்குற ஹிட் பாடல்கள் எல்லாத்தையும் தாண்டி , அவருடை நட்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.இயக்குநர் சிபி கடுமையா உழைக்குறாரு. மீதியை ஆடியன்ஸ் பார்த்துப்பாங்க. அவர் உழைப்ப நான் நம்புறேன்.எமோஷன்ஸ்ற்கு எப்போதுமே மதிப்பு உண்டு. சமூக வலைத்தளங்கள்ல நாம பார்க்குற உலகம் எல்லாம் ரொம்ப விளையாட்டானது.
அது ஜாலியா பேசி ஜாலியாவே முடிஞ்சு போயிடும் . ஆனால் நிஜ வாழ்க்கையில இருக்கும் உறவின் ஆழத்தை சிபி சொல்ல ஆசைப்பட்டாரு அதுதான் டான் திரைப்படம் . எங்க அப்பாவோட யூனிஃபார்ம் மிடுக்கு எல்லாத்தையும் பார்த்துட்டு நான் அவரை போல போஸிஸ் அதிகாரியாகனும்னு நினைத்திருந்தேன். அவரும் ஐ.பி.எஸ் அதிகாரியாக மாறி , என்னை விட மேல் அதிகரியாக ஆகவேண்டும் என நினைத்தார். அதுதான் என் கனவாகவும் இருந்தது.அப்போவோட மறைவுக்கு பிறகு அந்த வேலை மீது பயம் வந்துருச்சு.அதன் பிறகு உங்கள் கைத்தட்டல்தான் என்னை இதை பற்றிக்கொள்ள வச்சது“ என சிவக்கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.