Leo Trailer: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லிலோ படத்தில் ஆபாச வார்த்தை இடம்பெற்றிருப்பது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், மிஷ்கின், கௌதம் மேனன் என பலரும் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. ரிலீஸ்க்கு முன்னதாக லியோ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணம் காட்டி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
எனினும், படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக கடந்த ஐந்தாம் தேதி லியோ டிரெய்லர் ரிலீசாகும் என்றும், அதுவும் சன் டிவி தொலைக்காட்சியில் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டது. அதேபோல் கடந்த 5ம் தேதி மாலை 6.30 மணியளவில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியானது. முன்னதாக படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். லியோ டிரெய்லரில் விஜய் குரலில் குட்டி கதை ஒலிக்கப்படுவதுடன், வன்முறை காட்சிகளும், விஜய் ஆபாச வார்த்தை பேசுவதும் இடம்பெற்றிருந்தது.
லியோ படத்தில் ஆபாச வார்த்தை இடம்பெற்றதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அகில் பாரத் இந்து மகா சபா சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், லியோ படத்தில் கொச்சையான ஆபாச வார்த்தை இடம்பெற்றிருப்பதாகவும், அதை படக்குழு நீக்க வேண்டும் என்றும், தவறினால் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லியோ படத்தில் ஆபாச வார்த்தை இடம்பெற்றிருப்பது குறித்து சீமான் பேசியுள்ளார். அதில், ”சாதாரணமான மக்கள் மொழியில் இயல்பாக தான் டிரெய்லர் காட்சிகள் உள்ளன. வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இயல்பான பேச்சுகள் இருக்கும். வெப் சீரிசில் கொச்சவார்த்தைகள் ஏராளமாக இடம்பெறுகின்றன. மயிர் என்ற வார்த்தையே இங்கு கெட்ட வார்த்தையாக பரப்பி வருகின்றனர். விஜய் பேசுவதால் எல்லாரும் பேசப்போறது இல்லை. விஜய் சிகரெட் பிடிப்பதாலோ இல்லை மது அருந்துவதாலோ அதேபோல் எல்லாரும் செய்வார்கள் என்று கூறுவது தவறு. தணிக்கை குழுவுக்கு சரியில்லாததை நீக்குகின்றனர் என பதிலளித்தார்.
மேலும் படிக்க: Ayalaan Director: ஒரு வரியை நம்பினார் சிவகார்த்திகேயன்.. 8 ஆண்டுகால காத்திருப்பு பற்றி அயலான் இயக்குநர் ரவிக்குமார்!
Abavanan: பிரம்மாண்டத்தின் முன்னோடி... 90ஸ்களின் ஆக்ஷன் திரில்லர் ஆபாவாணன் - ஒரு குட்டி ரீவைண்ட்...!