மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


10.10.2023 மற்றும் 11.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


12.10.2023 மற்றும் 13.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த வாரம் சென்னையில் வரண்ட வானிலையே காணப்பட்ட நிலையில் நேற்று மழை பெய்தது. காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. தாம்ப்ரம், சேலையூர், மேடவாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், கோவிலம்பாக்கம், ஈச்சங்காடு, மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவானது. ஆனால் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரண்ட வானிலையே நிலவியது. இதன் காரணமாக பூமியின் உஷ்னம் சற்று தணிந்துள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
தேனாம்பேட்டை (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை) தலா 4, நாமக்கல் 3, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), எம் ஜி ஆர் நகர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2, சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம் (செங்கல்பட்டு), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அடையார் (சென்னை), மாரண்டஹள்ளி (தர்மபுரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


Kilambakkam Railway Station: கேட்டது ரெடி ஆயிடுச்சு...! சுறுசுறுப்பாக நடைபெறும் பணிகள்..! இன்னும் 4 மாசம்தான்..!


TTF Vasan: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து.. போக்குவரத்துத்துறை அதிரடி..