அமெரிக்காவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நயன்தாரா தனது மகன்களின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. 


ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி, பில்லா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக உயர்ந்தார். பின்னர், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து சோலோ கேரக்டர்களில் அசத்தினார். ஆக்‌ஷன்களிலும் அதிரடி காட்டிய நயன்தாரா தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். 


இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு இந்தியில் அறிமுகமான நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.1000 கோடிகளை தாண்டி சாதனை படைத்து வருகிறது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகைத்தாய் மூலம் கடந்த அக்டோபர் மாதம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் அவர்களுக்கு உயிர், உலக் என பெயர் வைத்ததாக அறிவித்தனர். 






அண்மையில் இன்ஸடாகிராமில் இணைந்த நயன்தாரா முதல் முறையாக தனது குழந்தைகளின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். தொடர்ந்து குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் உயிர், உலக் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன், நயன் தாரா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறது. தற்போது நயன்தாரா தனது மகன்களின் முதல் பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 






அமெரிக்காவின் கோலாலம்பூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாடும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் மகன்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க: Chithha Movie Review: நெகிழ வைக்கும் உண்மைக்கதை... சித்தார்த் நடித்திருக்கும் 'சித்தா' திரை விமர்சனம்!


Chandramukhi 2 Review: வேட்டையன் கேரக்டரில் ட்விஸ்ட் வைத்த பி.வாசு.. சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!


Iraivan Movie Review: தியேட்டரை அலற வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவி ஜெயித்தாரா.. 'இறைவன் ' பட முழு விமர்சனம்!