திண்டுக்கல் அடுத்த வத்தலகுண்டு அருகே மழை வளம் வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு விடிய விடிய கறி விருந்து வெகு சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மழை வளம் வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு விடிய விடிய கறி விருந்து கொடுக்கப்பட்டது. அய்யம்பாளையம் மருதாநதி அணை பகுதியில் அமைந்துள்ள சடையாண்டி கோவில் ஓர் இரவு திருவிழா நடைபெற்றது . அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோவிலில் இருந்து பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு சடையாண்டி கோவிலில் இரவு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையின் போது பக்தர்களால் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டது இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.
Dengue Fever: தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்...4 வயது சிறுமி உயிரிழந்த சோகம்... மக்கள் அதிர்ச்சி
Crime: "எனக்கு டைம் ஒதுக்கவில்லை" - காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்
பின்னர் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு தயாரிக்கப்பட்டது பலி கொடுக்கப்பட்ட அனைத்து ஆடுகளும் கறியாக வெட்டப்பட்டு சமைக்கப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விருந்தாக கொடுக்கப்பட்டது. அதிகாலை வரை மட்டுமே நடந்த இந்த நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றன.