National Film Awards 2023 Highlights: 69வது தேசிய விருதுகள்... சிறந்த நடிகர் யார்? சிறந்த திரைப்படம் என்ன? மொத்த லிஸ்ட்டும் இங்கே...!
National Film Awards 2023 LIVE Highlights: 69வது தேசிய விருது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
தேசிய திரைப்பட விழாவில் 6 விருதுகளை குவித்த ஆர்.ஆர்.ஆர் குறித்த முழு விவரத்தை படிக்க :
National Film Awards 2023: மாஸ் காட்டிய திரைப்படம்... தேசிய திரைப்பட விழாவில் 6 விருதுகளை குவித்த ஆர்.ஆர்.ஆர்
எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களுக்கு விருது வழங்கப்படாததால் தமிழ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்த முழு விவரங்களை படிக்க :
National Film Awards 2023: ஜெய் பீம் முதல் சார்பட்டா பரம்பரை வரை... புறக்கணிப்பட்ட தமிழ் படங்கள்... அதிருப்தியில் ரசிகர்கள்!
சிறந்த தெலுங்கு படத்திற்கான விருது உப்பெனாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியை அப்படக்குழு கொண்டாடி வருகிறது.
அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி, அவரின் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
ஆர் ஆர் ஆர் வெற்றி குறித்த ட்வீட்
ஆலியா பட்டிற்கு வாழ்த்து கூறிய ராஜமெளலி
புஷ்பா அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்து கூறிய ராஜமெளலி
புஷ்பா படக்குழுவிற்கான வாழ்த்து
ஆர் ஆர் ஆர் 6 விருதுகளை பெற, புஷ்பா 2 விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கடந்தாண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம், 5 விருதுகளை குவித்தது. இந்த முறை ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்த ஆர் ஆர் ஆர் 6 விருதுகளை பெற்று, அதிக விருதுகளை குவித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தேசிய விருது பெற்ற தமிழ் படங்கள் மற்றும் கலைஞர்கள் :
கடைசி விவசாயி முதல் இரவின் நிழல் வரை... தேசிய விருதுகளைக் குவித்த தமிழ் படங்கள், கலைஞர்கள் லிஸ்ட்!
69வது தேசிய திரைப்பட விருதுகள் - கடைசி விவசாயி படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது
ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ் படங்களுக்கு பெரிதாக விருதுகள் வழங்கப்படவில்லை என்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த ஆண் பின்னணி பாடகர்(கால பைரவா), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்( வி ஸ்ரீனிவாஸ்), சிறந்த நடன அமைப்பு(ப்ரேம் ரக்ஷித்), சிறந்த சண்டை காட்சி இயக்குநர்( கிங் சாலமன்) ஆகிய ஆறு பரிவுகளின் கீழ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது ஆர் ஆர் ஆர் படக்குழு!
சிறந்த ஜூரி விருது, ஷெர்ஷா படத்தை இயக்கிய விஷ்ணு வர்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி பாடகருக்கான விருது, கொமுரம் பீமுடோ பாடலை பாடிய கால பைரவாவிற்கு கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருது, பங்கஜ் திரிபாதிக்கு (மைமி) அறிவிப்பு.
சிறந்த துணை நடிகைக்கான விருது, பல்லவி ஜோஷிக்கு (தி காஷ்மீர் ஃபைல்ஸ்) அறிவிப்பு.
சிறந்த திரைப்பட தேசிய விருது, ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது, காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர் ஆர் ஆர் படத்திற்கு இசையமைத்த கீரவாணிக்கு சிறந்த பின்னணி இசை பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாதிற்கு சிறந்த பாடலுக்கன விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்குபாய் கத்தியவாடி படத்துக்காக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த எடிட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரே படத்தை இயக்கியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது, ஆலியா பட் மற்றும் கிருத்தி சனோனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா... ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷல் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றுள்ளார்
சிறந்த மலையாள திரைப்படத்திற்கான விருதை பெறுகிறது ஹோம்.
சிறந்த இசை, சிறந்த நடன அமைப்பு, சிறந்த சண்டை பயிற்சி, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய நான்கு பிரிவுகளுக்கு தேசிய விருது பெறுகிறது ஆர்.ஆர்.ஆர்.
சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பெறுகிறது விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி.
சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை பெறுகிறது விக்கி கெளஷல் நடித்த சர்தார் உத்தம்.
கடைசி விவசாயி படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது
சிறந்த அனிமேஷன் திரைப்படமாக மலையாள திரைப்படமான கண்டிதுண்டு தேர்வாகியுள்ளது
வயலின் இசைமேதை டி.என்.கிருஷ்ணன் பற்றிய ஆவணப் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பி.லெனினின் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்துக்கு சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் சாராத குறும்படப் பிரிவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு “கருவறை” குறும்படத்துக்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் வசந்த் 69வது தேசிய விருதுகளை அறிவித்து வருகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த மொத்தம் 28 மொழிகளில் 280 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த பிரிவுகளுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளன.
69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
69வது தேசிய திரைப்பட விருதின் நடுவர் குழுவில் இயக்குநர் வசந்த் உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கங்கனா ரனாத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கலாம்.
சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதை சார்ப்பட்ட பரம்பரை வெல்லலாம்.
கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்த ஆலியா பட்டிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படலாம்.
வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது 2019ல் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
கடந்த ஆண்டு சூரரைப் போற்று படம், 5 விருதுகளை வென்றது போல் இந்த முறை எந்த படம் அதிக விருதுகளை வெல்லும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
மின்னல் முரளி படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வெல்லலாம். அதுபோல், நயட்டு படத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படலாம்.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருதையும் ஆஸ்கர் விருதையும் வென்றது. இதற்கு இசையமைத்த கீரவாணிக்கு மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் போட்டியாக இருப்பார் என்பது விஜய் ரசிகர்களின் கருத்து.
கடந்தாண்டு, சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப்பெற்ற சூர்யா, இம்முறையும் தேசிய விருது பெற்றால், அது அவருக்கு பேக் டூ பேக் வெற்றியாக அமையும்.
நேஷனல் அவார்ட்ஸ் என்ற ஹாஷ்டாகில், அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வெல்லும் வாய்ப்புள்ளது என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
சார்பட்டா பரம்பரையில் வரும் பசுபதி, கர்ணனில் வரும் லால், ஜெய் பீமில் வரும் மணிகண்டன் ஆகிய மூவரில் யாரேனும் ஒருவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைக்கலாம்.
2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் கொமாரம் பீம் கதாபத்திரத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வெல்ல வேண்டும் என்பது தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
ஆர்யா, சூர்யா, தனுஷ் ஆகிய மூவரில் ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல் சில மணி நேரங்களில் வெளியாகவுள்ளது.
2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு, இன்று மாலை 5 மணிக்கு இந்திய தேசிய திரைப்பட விழா விருது வழங்கப்படவுள்ளது.
Background
தேசிய விருதுகள்:
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருது வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.
69வது தேசிய விருதுகள்:
2021-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் தான் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. அதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ஜெய் பீம், தனுஷ் நடித்த கர்ணன், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிறந்த திரைப்பட விருது?
குறிப்பாக ஜெய் பீம், கர்ணன் மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்களில் ஏதேனும் ஒன்று, சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இயக்குனர்களில் ஞானவேல், மாரி செல்வராஜ் ஆகியோரில் ஒருவருக்கு விருது கிடைக்கலாம். மேலும் இசையமைப்பாளர்களில் அனிருத்திற்கு விருது கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ் திரையுலகத்திற்கு இந்த ஆண்டு கூடுதல் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நடிகர்கள் சூர்யா, தனுஷ், ஆர்யா, மணிகண்டன் ஆகியோர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்ற மொழியில் எப்படி?
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரையில் ‘புஷ்பா’ படம் போட்டியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் பெரிய அளவிலான போட்டிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. காரணம் அந்த ஆண்டில் வெளியான சூர்யவன்ஷி மற்றும் 83 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அந்த ஆண்டு வசூல் ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்துள்ளன. அதேநேரம், மலையாள படத்தில் மின்னல் முரளி, தி கிரேட் இந்தியன் கிட்சன், மாலிக் மற்றும் ஹோம் போன்ற பல வெற்றி படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் மலையாள திரைப்படங்கள் அதிக விருதுகளை வெல்ல வாய்ப்புள்ளது. இதனால், தேசிய சினிமா விருதுகளை வெல்லப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -