பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் திரைப்படம் மீதான ஈடுபாட்டை விட சீரிஸ் என்னும் வெப் தொடர் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது. 


அந்த வகையில் உலகின் பல நாடுகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வெப் தொடர்தான் மணி ஹைஸ்ட். வங்கிகளில் கொள்ளையடிக்கும் வழக்கமான கொள்ளைக்கார கதைத்தான் என்றாலும் அதில் பல புதுமைகளை புகுத்தி அசத்தியிருந்தார் இயக்குநர்.




குறிப்பாக இந்த வெப் சீரிஸானது மைண்ட் கேமிற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.


ஏற்கனவே நான்கு சீசன்கள் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்திருந்தது. இதனையடுத்து ஐந்தாவது சீசனின் முதல் வால்யூம் கடந்த வருடம் செப்டம்பர் மாதமும், இறுதி வால்யூம் கடந்த டிசம்பர் மாதமும் வெளியானது. 


Virat Kohli Fitness: அடுத்த டெஸ்ட்ல ஆடுவாரா கோலி? இப்போதைக்கு இதுதான் நிலைமை.. புஜாரா பகிர்ந்த அப்டேட்.!




மணி ஹீஸ்ட் முடிவடைந்துவிட்டதே என்று ரசிகர்கள் வருத்தப்படும் அளவுக்கு அதன் திரைக்கதை இருந்தது. திரைக்கதை மட்டுமின்றி அதில் நடித்தவர்களும் ரசிகர்களோடு ஒன்றி போயிருந்தனர். இதனையடுத்து அவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.


மேலும் வாசிக்க: Valimai Release Postponed: வலிமை ரிலீஸ் ஒத்திவைப்பு.. கனத்த மனதோடு அறிவித்த போனி கபூர்..!


 






அப்படி ரசிகர்களுடன் ஒன்றி போயிருந்தவர்களில் ஸ்டாக் ஹோமும் ஒருவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் ப்ரொபஸர் கேங்குடன் இணையும் ஸ்டாக் ஹோம் கடைசிவரை அவர்களில் ஒருவராகவே இருக்கும்படி இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார்.


இந்நிலையில் ஸ்டாக் ஹோம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை எஸ்தர் அசெபோ விநாயகர் சிலைக்கு முன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. அவரது புகைப்படத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


------


V Kumar Music Director: `கலைமாமணி’... `மெல்லிசை சக்ரவர்த்தி!’.. மனதோடு பாடிய இசையமைப்பாளர் வி.குமாரின் நினைவு தினம் இன்று!