தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய 40-வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தார். அதனை அடுத்து, ஜனவரி 3-ம் தேதி அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது.


முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக கோலி பங்கேற்க மாட்டார் என டாஸின்போது அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, ராகுல் இந்திய அணியை இந்த போட்டியில் வழி நடத்துகிறார். மேலும், கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டார்.  டாஸின்போது பேசிய கேப்டன் ராகுல், ”எதிர்ப்பாராதவிதமாக கோலிக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டிருப்பதால், இந்த போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். பிஸியோ மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதால், அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், கோலியின் உடல்நிலை குறித்து அப்டேட் தந்திருக்கிறார் மிடில் ஆர்டர் பேட்டர் புஜாரா. “என்னால் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்ல முடியாது. எனினும், விராட் கோலி உடல்நலம் தேறி வருகிறார் என்பதை சொல்ல முடியும். விரைவில், அவர் முழு உடற்தகுதி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிஸியோதெரபிஸ்ட் அணியும், பிசிசிஐயும் விரைவில் தெளிவான விளக்கம் தருவார்கள்” என தெரிவித்திருக்கிறார். 



இரண்டாவது டெஸ்ட் அப்டேட்:


இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்களுடன் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 


இந்த இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தேவைப்பட்டுகிறது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக தாமதமாகியுள்ளது. 


இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றால், டெஸ்ட் தொடர் சமனாகும். இதனால், மூன்றாவது போட்டி தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மாணிக்கும். மாறாக, விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றால், தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி வெல்லும் முதல் டெஸ்ட் தொடராக இது அமையும். எதுவாக இருந்தாலும், கடைசி டெஸ்ட் போட்டிக்குள் கோலி அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண