தமிழ்நாடு :



  • தமிழ்நாட்டில் நேற்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

  • மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க இரவு நேரங்களில் காவல்துறை தீவிர கண்காணிப்பு

  • இரவு நேர ஊரடங்கால் தமிழ்நாட்டின் பிரதான சாலைகள் வெறிச்சோடியது

  • தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா

  • சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா

  • நீட் விலக்கு மசோதா குறித்து நாளை சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்

  • நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம் – சட்டசபையில் அ.தி.மு.க. உறுதி

  • சுனாமி போல பரவும் டெல்டா, ஒமிக்ரான் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை

  • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் அடைப்பு


இந்தியா :



  • பிரதமரின் பஞ்சாப் பயண பாதுகாப்பு குறைபாடு : மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்

  • பிரதமர் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க பஞ்சாப் விரைகிறது மத்திய உள்துறை அமைச்சகம்

  • பிரதமரின் பஞ்சாப் பயணத்தின் பாதுகாப்பு குறைபாடு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • பிரதமரின் பாதுகாப்பு மீது குறைபாட்டிற்கு மாநில அரசின் மீது குற்றம் சாட்டுவது நியாயமல்ல – பஞ்சாப் முதல்வர்

  • நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு 95 லட்சமாக உயர்வு


உலகம் :



  • ஒமிக்ரான் வைரசால் புதிய வகை வைரஸ் உருவாகலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

  • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : ஜப்பான் தகவல்

  • தடுப்பூசி செலுத்தாதவர்களை பிரான்ஸ் அதிபர் விமர்சித்து பேசியது கடும் சர்ச்சை

  • கொரோனா பாதித்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமையே தொடரலாம் : உலக சுகாதார அமைப்பு


விளையாட்டு :



  • இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி

  • ஜோகன்ஸ்பர்க்கில் இந்திய அணி நிர்ணயித்த 243 ரன்கள் இலக்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து வெற்றி

  • முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலியாவை கண்டித்து செர்பியாவில் போராட்டம்

  • தடுப்பூசி செலுத்தாவிட்டால் விளைவுகளைச் சந்திக்கத்தான் நேரிடும் : ஜோகோவிச் விவகாரத்தில் நடால் கருத்து


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண