திருமணம் பற்றிய கேள்விக்கு மஞ்சிமா மோகன் சொன்ன பதிலில், “ முன்னால் என்னைப் பற்றி கிசுகிசுக்களே வராது. ஆனால் இப்போது கிசுகிசு வருகிறது. இதை பார்க்கும் போது ஃபைனலாக என்னை பற்றி இப்போதாவது கிசுகிசு வந்ததே என்றுதான் பலருக்கும் தோன்றுகிறது என நினைக்கிறேன். நடிகராக இருக்கும் போது உங்களுக்கு பர்சனல் லைஃப் என்பது மிகவும் குறைவாக இருக்கும். 


என்னைப்பொருத்தவரை இது என்னுடைய தொழிலாக இருந்தாலும், எனக்கென்று சில விஷயங்கள் பர்சனாலாக இருக்கிறது. அதை நான் என்னோடு வைத்துக்கொள்ள நினைக்கிறேன். என்னுடைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்துகொள்வது எனக்கு பிடிக்காது. அதை எப்போதும் நான் பேசியதில்லை.


எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்கிற எண்ணம் இல்லை. இது பெரிய விஷயம். அப்படி ஏதும் நடந்தால் நானே வந்து சொல்கிறேன். கெளதம் கார்த்திக் வெளிப்படையான மனிதர். கெளதம் கார்த்திக் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். எனது குடும்பத்தினருடன் அவருக்கு நல்ல பழக்கம் இருக்கிறது. அவரைப்போலவே எனக்கு பல நடிகர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். கெளதம் கார்த்திக் உடனான கல்யாணம் குறித்த செய்தியை கேட்ட எனது அம்மா சிரித்து கடந்து விட்டார். ஆனால் எனது அப்பா வருத்தமடைந்தார்.” என்றார் 


Salute movie Review : ‛இதுதான்டா போலீஸ்... இல்லை இல்லை... இதுவும் போலீஸ்...’ சல்யூட் அடிக்க வைக்கிறதா சல்யூட்? ஆழமான விமர்சனம் இதோ!


Lalitham Sundaram Review : ‛பாசம் வைக்க நேசம் வைக்க... குடும்பம் உண்டு வாழ வைக்க...’ உருக வைக்கும் குடும்ப படமா ‛லலிதம் சுந்தரம்’ ?


தகவல் உதவி:-


 



பிரபல நடிகர் கெளதம் கார்த்திக்கும், மலையாள நடிகையான மஞ்சிமா மோகனும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இவர்களது திருமணம் இந்தாண்டு நடைபெற இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்


பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய  'கடல்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து,  ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ‘மிஸ்டர். சந்திரமெளலி, ‘ தேவராட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்தாக  ‘பத்து தல’ படம் வெளியாக உள்ளது.  


 






தேவராட்டம்’ படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். அந்தப்படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தொடர்ந்து பழகி வந்ததாக தகவல் வெளியானது. 


மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானவர் மஞ்சிமா மோகன்.  தமிழில் கெளதம் மேனன் இயக்கிய  “அச்சம் என்பது மடமையடா” படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து “ இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’,  ‘ துக்ளக் தர்பார்’, ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.