அஜித் நடிக்கும் 62-ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், “அஜித் குமாரின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும். இந்தப்படம் அடுத்த வருடத்தின் மத்தியில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அஜித் குமார் தன்னை பாராட்டியதாக விக்னேஷ் சிவன் பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’ பாடல், வலிமையில் ‘நாங்க வேற மாதிரி’ ‘அம்மா’ உள்ளிட்ட பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.






அந்த வீடியோவில், “அஜித் சார் கேட்டுட்டு எனக்கு ஃபோன் செய்து பாராட்டினார். ரொம்ப நேரம் பேசினார். அவர் மற்றவர்களை ஊக்கப்படுத்துவார். அது அவருடைய தனித்துவமான பண்பு. அவர் எனக்கு ஃபோன் செய்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என தெரிவித்திருக்கிறார்


ஏகே 62 படத்திற்கு முன்பு ஏகே 61-க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை அடுத்து, அஜித்தின் ஒரு புதிய லுக்கின் ஒரு கருப்பு வெள்ளை மாதிரியை போனி கபூர் ஏற்கெனவே ட்விட்டரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. அதனை அடுத்து ஏகே 61 அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.




மேலும் படிக்க: ஆல்யாவும், சஞ்சீவும் காரை பரிசு கொடுத்திருக்காங்க.. யாருக்கு தெரியுமா மக்களே? குவியும் வாழ்த்துகள்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண