வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தை இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.


பல தடங்கள்களுக்கு பின் வெளியான இப்படம் பெரும் ஹிட் ஆகியுள்ளது. இதுவரை இப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைய இருக்கும் சூழலிலும் தற்போதுவரை பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


இதை முன்னிட்டு, இன்று சென்னையில் மாநாடு படத்தின் வெற்றிவிழா கூட்டம் நடந்தது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே சூர்யா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சிம்பு மட்டும் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வேறொரு பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், கோலிவுட்டில் தனக்கு கம்பேக் கொடுத்த படத்தின் வெற்றி விழாவில் சிம்பு நிச்சயம் கலந்துகொண்டிருக்க வேண்டும் என பலர் கூறிவருகின்றனர்.




இந்நிலையில் இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசுகையில்,  “ஒரு படத்தின் வெற்றி கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோவுக்குத்தான் போய்ச் சேரும். ஒரு நல்ல கதை, நல்ல திரைக்கதை யாரையும் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும். இந்தப் படம் இதன் ஹீரோவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு உயரத்தில் கொண்டுபோய் அமர வைத்திருக்கிறது.


இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனை. இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும். அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்? அப்படிப்பட்ட ஒரு வெற்றியை கொண்டாட அந்த கதாநாயகன் இங்கே இருக்கவேண்டும்.


படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும். வெற்றி வந்தபிறகு தலைக்கனம் இருக்கக்கூடாது” என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது - நீதிபதி புகழேந்தி


David Warner with Family: போட்டியை வென்றது ஆஸி., மனதை வென்றது வார்னர் - வைரலாகும் ஃபேமிலி சங்கமம்


TNPSC Free Coaching | குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்: அம்பேத்கர் கல்வி மையப் பயிற்சி குறித்த முழு தகவல்..