2021-22 ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.


தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த பட்டப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,276 இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளன. 


இந்தப் படிப்புகளுக்காக 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 25-ம் தேதி தொடங்கியது.




இப்படிப்புகளுக்கு 64,900 பேர் விண்ணப்பித்தனர். இதில் 58,475 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.


துணை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலைக் காண https://tnmedicalselection.net/news/MERIT.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


நாளை முதல் கலந்தாய்வு


துணை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (டிசம்பர் 22) முதல் தொடங்குகிறது. முதலில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் கலந்தாய்வும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு  37,334 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு துணை மருத்துவப் படிப்புக்கு மேலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 58,475 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.




தரவரிசைப் பட்டியல் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இணைய தளமான www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகியவற்றைக் காணலாம். 


வழக்கமாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்குப் பின்னரே துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும். எனினும் கடந்த ஆண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர் சேர்க்கையும் விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண