பள்ளிகள், கல்லூரிகள், மார்க்கெட், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது.
அதனடிப்படையில் திரையரங்குகளுக்குச் செல்வோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இதனை இயக்குநர் வெங்கட் பிரபுவும் ரீட்வீட் செய்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் .
யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் இந்த நடைமுறையால் திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்ற எண்ணம் படக்குழுவுக்கு எழுந்திருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் இவ்வாறு கருத்து கூறுகிறார் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ABP Nadu Impact: 4 ஆண்டுகளாக விடியலுக்கு காத்திருந்த கால்பந்து அணி.. அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலின்
Bharathiraja Speech: ‛சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை’ கலாய்த்தாரா... பாராட்டினாரா பாரதிராஜா?
Watch Video | பிரச்சனை கொடுக்குறாங்க... மாநாடு திரைப்பட விழா மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு!