லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகத் தயாராக இருக்கிறது. லியோ படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ்கள் இருக்கப்போவது உறுதி. இவற்றை ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பெரிய அளவிலான ரகசியங்களை வெளியே சொல்லாமல் தவிர்த்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் படம் வெளியாவது வரை பொறுமை இல்லாத ரசிகர்கள், படம் பற்றி அலசி ஆராய்ந்து பல தகவல்களை கண்டுபிடித்து வருகிறார்கள். அப்படியான ரசிகர் ஒருவர் லியோ படம் பற்றி இருக்கும் முக்கியமான கேள்வி ஒன்றுக்கான விடையை கிட்டதட்ட நெருங்கிவிட்டார் என்று சொல்லலாம்!
லியோ ட்ரெய்லர்
சமீபத்தில் வெளியாகிய லியோ படத்தின் ட்ரெய்லர் லியோ படத்தின் கதை எப்படியானதாக இருக்கும் என்பதை உணர்த்தியது. இந்த ட்ரெய்லரை பார்த்து பெரும்பாலான ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி, “பார்த்தி மற்றும் லியோ ஆகிய இருவரும் ஒரே ஆள்தானா, இல்லை விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருகிறாரா” என்பதே!
லியோ படத்தின் கதை தழுவி எடுக்கப்பட்ட ஹிஸ்டர் ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரே ஆள் இரண்டு கதாபாத்திரங்களாக நடிப்பது படத்தின் கடைசியில் தெரியவரும். அதே போல் லியோ படத்தில் லியோ தான் பார்த்தியாக நடிக்கிறார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு தரப்பு ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் கதையை மாற்றி இரண்டு லியோ பார்த்தி என இரண்டு கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இடது கை பழக்கம் கொண்டவர் லியோ
பல்வேறு வகையில் இந்த ட்விஸ்ட்டை ஆராய்ந்து வரும் லியோ படத்தின் ரசிகர்கள், தற்போது வந்திருக்கும் முடிவு லியோ மற்றும் பார்த்தி இரண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் என்பது. இதற்கு உதாரணமாக லியோ ட்ரெய்லரில் பார்த்தி கதாபாத்திரம் வலது கையில் விசிலடிப்பதையும், லியோ இடது கையில் விசிலடிப்பதையும் எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்கள். இதை பெரும்பாலான ரசிகர்கள் ஆதரித்தும் வருகிறார்கள்.
லியோ
விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லியோ படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க : Free Breakfast Scheme: இனி இந்த மாணவர்களுக்கும் காலை உணவு; அரசு அதிரடி அறிவிப்பு