சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் மூவரும் குணசேகரன் பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள். அவர் பழைய மாதிரி இல்லை என்றும் அவரிடம் நிறையே மாற்றங்கள் தெரிகிறது என்பது பற்றியும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.


குடும்பத்தில் இருக்கும் பெண்களின் திமிரை அடக்கி அவர்களை கைக்குள் கொண்டு வர வேண்டும் என அண்ணன் சொன்னது போல் செய்ய வேண்டும் என ஞானம் சொல்கிறான். அதற்கு கதிர் நக்கலாக, “அதற்கு நீ எங்கள் பக்கம் இருக்க வேண்டும்” என கதிர் சொல்கிறான்.


அப்பாதவையும் அந்த ஜீவானந்தத்தையும் போட்டுத் தள்ளும் திட்டத்தை இந்த தடவை எந்த ஒரு பிசிறும் இல்லாமல் முடிக்க வேண்டும் என கதிர் சொல்கிறான். கரிகாலனும் அதற்கு ஆமாம் சாமி போடுகிறான். இப்படியாக அவர்கள் காரில் பேசிக்கொண்டு வருகிறார்கள்.



ஜனனியின் அப்பா அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் புறக்கணிக்கிறார். ஈஸ்வரி ஜனனிக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். உங்களின் பேராசைக்காக அவளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டீர்கள் என துணிச்சலாக பேசுகிறாள். அப்பாவை எதிர்த்து சக்தியுடன் சேர்ந்த நான் ஜெயித்து காட்டுவேன் என சவால் விடுகிறாள்.


“அப்படி நடந்தால் நான் உன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன், அதுவரையில் நான் உன்னை என்னுடைய மகளாக ஏற்று கொள்ள மாட்டேன்” என சொல்லிவிட்டு கிளம்புகிறார் ஜனனியின் அப்பா. ஈஸ்வரி, நன்னிதி மற்றும் ரேணுகா மூவரும் ஜனனிக்கு ஆறுதல் கூறி “நிச்சயமாக நீ ஜெயிப்ப” என உற்சாகடுகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீட்டு வாசலில் அனைவரும் உட்கார்ந்து இருக்க, ஞானமும் கதிரும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜனனியின் அப்பா வீட்டுக்கு வந்து போன விஷயம் கேள்விப்பட்ட சக்தியிடம் சென்று "இருக்குற பிரச்சினை எல்லாம் போதாதுன்னு தேவையில்லாமல் எதுக்கு அந்த ஆளு  வீட்டுக்கு வந்தான்" என அதட்டிக் கேட்கிறான். "இந்த பாரு, இதெல்லாம் உன்கிட்ட சொல்லறதுக்கு தேவையும் இல்லை அவசியமும் இல்ல, கிளம்பு" என்கிறான் சக்தி. இந்த பதிலை கேட்டு அவமானப்படுகிறான் ஞானம்.


 




ஜான்சி ராணி கரிகாலனிடம் "அண்ணன் எங்க அதை சொல்லுடா" என குணசேகரனைப் பற்றி பதட்டத்துடன் கேட்கிறாள். "விடமுடியாதுன்னு சொல்லிட்டாங்க" என கரிகாலன் அங்கு நடந்த அனைத்தையும் சொல்லவும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அப்பத்தா வீட்டுக்கு வந்து அனைவரிடமும் பேசுகிறார். "தெளிவா நீங்க எல்லாரும் எல்லாத்தையும் இத்தோட முடிச்சுக்குங்க என சொல்லிட்டு போறதுக்காக வந்தேன்" என்கிறார். அவரை பார்த்து அனைவரும் முறைக்கிறார்கள். இந்த தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் ஹிண்ட்.


 




அப்படி அப்பத்தா என்ன திட்டத்துடன் வந்து இருப்பார்? அது எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும்? மீண்டும் குணசேகரன் எப்போ வருவார்? என பல கேள்விகள் எதிர்நீச்சல் (Ethirneechal) ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.