இந்த ஆண்டு பேக் டூ பேக் ஹிட் கொடுத்து வசூல் சாதனை செய்து வரும் மலையாளத் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களையும் மகிழ்வித்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கெனவே மலையாளப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களையும் குறிவைத்து மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளன. அதேபோல் பிரேமலு, ஆவேஷம் , ஆடு ஜீவிதம் ஆகிய திரைப்படங்களும் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் மகிழ்வித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.


கட்டீஸ் கேங் திரைப்படம்


அந்த வகையில் தற்போது கட்டீஸ் கேங் (Kattis Gang) என்ற மலையாள படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.  ஓசியானிக் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படத்தை அனில் தேவ் இயக்கியுள்ளார்.  உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களும், எழுத்தாளருமான ராஜ் கார்த்திக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை மையப்படுத்தி கட்டீஸ் கேங் படத்தின் கதை அமைந்துள்ளது.


 



இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக இருப்பதுடன், பாட்ஷா படம் பற்றிய ரெஃபரன்ஸ் காட்சிகள், தமிழ் வசனங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை ரோகிணி தியேட்டரில் கட்டீஸ் கேங் படத்தின் ட்ரெய்லரை முன்னதாக வெளியிடப்பட்டது.


ரஜினி ரசிகர்கள் டார்கெட்



மேலும் ரஜினிகாந்த் ரசிகர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடையும் நீர் மோரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சினோரா அசோகனும் ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த்தும் தலைமை தாங்கினார்கள். கட்டீஸ் கேங் திரைப்படம் வருகிற மே மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.




தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா, கட்டீஸ் கேங் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமல்ஹாசனின் குணா பட ரெஃபரன்ஸ் உடன் வெளியாகி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் சக்கைபோடு போட்டது போல் இப்படமும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Vetrimaaran: சாதி இல்லையா? இவங்க எங்க வாழறாங்க.. இயக்குநர் பிரவீன் காந்தி கருத்துக்கு வெற்றிமாறன் பதிலடி!


Box Office Collection: ஒரு பக்கம் அரண்மனை 4 இன்னொரு பக்கம் ஸ்டார் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!