சமீபத்தில் திரையரங்கில் வெளியாகிய படங்களில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் கவின் நடித்துள்ள ஸ்டார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இரண்டு படங்களுமே முதல் சில நாட்களில் நல்ல வசூலை ஈட்டியிருக்கும் நிலையில் இரண்டு படங்களின் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்.
அரண்மனை 4
கடந்த மே மூன்றாம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது அரண்மனை 4. தமன்னா , ராஷி கன்னா, வி.டிவி கணேஷ் , யோகிபாபு , கோவை சரளா, லொள்ளு சபா சேஷூ என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி அரண்மனை 4 படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அரண்மனை பட வரிசைக்கு எப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக இந்தப் படங்களில் படத்தின் இறுதியில் சுந்தர் சி வைக்கும் மசாலா பாடல்களுக்கு என தனி கூட்டம் இருக்கிறது . கலவையான விமர்சனங்களைப் பெற்றலும் அரண்மனை படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் ஆர்வமாக சென்று வருகிறார்கள்.
முதல் வாரத்தில் அரண்மனை படம் இந்தியளவில் 32.1 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி மொத்தம் 9 நாட்களில் 38.35 கோடி படம் வசூலித்துள்ளதாக இந்த தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டார்
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கும் படம் ஸ்டார். கவின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் திவ்யா போஹங்கர் , கீதா கைலாசம் , லால் , உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டார் படம் முதல் நாளில் பயங்கர பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. எப்படி இருந்தாலும் படம் முதல் நாளில் 2.8 கோடி வசூலித்த ஸ்டார் படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலை வாரி குவித்து வருகிறது.
இரண்டாவது நாளில் 4.14 கோடிகளை வசூலித்தது ஸ்டார் படம். இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக அதிகாலை முதல் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் சேர்ந்துள்ளது. இன்று மூன்றாவது நாள் வசூலுடன் 8.78 கோடியை ஸ்டார் படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Ameer: "அமீர் படத்துக்கு தடை விதிக்கனும்" கொந்தளித்த இயக்குனர் வராகி - காரணம் என்ன?
Kanal Kannan: "யாரும் தொட முடியாது! காவியோட பவர் அப்படி" ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்!