Nithin Gopi passes away : கன்னட நடிகர் நிதின் கோபி மரடைப்பால் உயிரிழந்தார். 


பெங்களூரின் இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நிதின். இவருக்கு திருமணமாகாத நிலையில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, நிதின் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.


திரையுலகில் புல்லாங்குழல் வாசிப்பாளராக பிரபலமைடைந்த கோபியின் மகனான நிதின் நடிகர் விஷ்ணுவர்தன் நடித்த ஹலோ டாடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கெரளித கேசரி, முத்தினந்தஹ ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா உட்பட திரைப்படங்களில் நடித்தவர். நிதின் பெரும்பாலான சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன் இயக்கினார். நிதின் 30 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நிதினின் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


முன்னதாக வசனகர்த்தாவும், இணை இயக்குநருமான பவுன்ராஜ் மாரடைப்பால் கடந்த 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர்  தமிழில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களில் துணை வசனகர்த்தாவாகவும், இணை இயக்குநராகவும் பணிபுரிந்தவர். திரைப்பட இயக்குநர் பொன்ராம் தொடர்ந்து தனது படங்களில் இவரது பங்களிப்பை ஈடுபடுத்தி வந்தார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘வெண்ணிலா கபடிக்குழு 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பவுன்ராஜ் நடித்திருந்தார்.


மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள பூதிபுரம் கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர் பவுன்ராஜ். திண்டுக்கல்லில் தங்கி புதிய படம் ஒன்றின் எழுத்துப்பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது


மேலும் படிக்க 


Train Accident : ரயில்வே துறையில் இத்தனை கோளாறுகளா? ”கவாச்” தொழில்நுட்பம் தோல்வியா? நீளும் காரணங்கள்..


Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்து.. மீட்பு பணிகள் நிறைவு.. ரயில்வே செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்..