கேடிஎம் நிறுவனம் தனது புதிய 250 அட்வென்ச்சர் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், V வடிவ இருக்கையின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


புதிய கேடிஎம் அட்வென்ச்சர்:


கேடிஎம் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தான், தனது 390 அட்வென்ச்சர் மாடலில் லோ-சீட்-ஹைட் வேரியண்டை அறிமுகம் செய்து இருந்தது.  அதன் தொடர்ச்சியாக தான் கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலின்,  லோ-சீட்-ஹைட் வேரியண்டையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய 250 அட்வென்ச்சர் மாடலின் சீட் உயரம் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். தற்போதைய புதிய 250 அட்வென்ச்சர் மாடல் லோ-சீட்-ஹைட் வேரியண்டில் 834 மில்லிமீட்டராக உள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனமானது புதிய இருக்கை வசதியை,  பயனாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


சிறப்பம்சங்கள்:


இதுதவிர புதிய மாடலின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலோஜன் முகப்பு விளக்கு, எல்.ஈ.டி டிஆர்எல்கள், எல்.ஈ.டி பின்புற விளக்குகள், எல்.ஈ.டி இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு இந்த மாடலில் 43mm அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேகிங்கிற்கு முன்புறம் 320mm சிங்கில் டிஸ்க், பின்புறம் 230mm சிங்கில் டிஸ்க் வழங்கப்படுகிறது. இத்துடன் டியுபுலர் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம் வழங்கப்படுகிறது.


கூடுதல் அம்சங்கள்:


ஆங்கரிங் அமைப்பில் 320மிமீ சிங்கிள் டிஸ்க், முன்புறத்தில் ரேடியலியாக பொருத்தப்பட்ட காலிபர் மற்றும் 230மிமீ சிங்கிள் ரோட்டார் மற்றும் பின்பக்கத்தில் மிதக்கும் காலிபர் உள்ளது. மோட்டார் சைக்கிள் ஒரு போல்ட் செய்யப்பட்ட துணை சட்டத்துடன் ஒரு குழாய் பிளவு-ட்ரெல்லிஸ் சட்டத்தை சுற்றி கட்டப்பட்டுள்ளது, மேலும் இது 177kg எடையுள்ள அளவைக் காட்டுகிறது.  சவாரி தொடர்பான தரவு முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் காட்டப்படும். சவாரி தொடர்பான தகவல்களைத் தவிர, இந்த டிஸ்ப்ளே சராசரி வேகம், தூரம்-க்கு-வெறுமை மற்றும் கியர்-பொசிஷன் காட்டி ஆகியவற்றையும் காட்டுகிறது. இதற்கிடையில், இந்த மோட்டார்சைக்கிளில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆஃப்-ரோடு, ஒரு ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் 12V சாக்கெட் உடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 


இன்ஜின் விவரங்கள்:


இந்த மாடலில் 249சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 29.6 ஹெச்பி பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய மாறுபாட்டின் மூலம், பைக் மிகவும் அணுகக்கூடியதாக இருப்பதால், பைக்கின் ஒட்டுமொத்த விற்பனையை KTM அதிகரிக்க வாய்ப்புள்ளது.  


Car loan Information:

Calculate Car Loan EMI