Leo Update: ப்ளடி ஸ்வீட்...! லியோ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் ஆண்டவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் பங்கேற்பாரா..?

Continues below advertisement

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என  தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் வேதா என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து பிரமாண்டமாக லியோவை இயக்கியுள்ளார். செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். 

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லியோ வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரோமோஷன் வேலையாக விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் என ஒவ்வொரு நடிகர்களின் பிறந்த நாளில் கிளிம்ப்ஸ் வீடியோக்களையும், போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. லியோ திரையரங்குகளில் ரிலீசாக இன்னும் ஒரு மாதமே இருப்பதால், இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

வரும் செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் திரை பிரபலங்களும், ரசிகர்களும் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மற்றொரு தகவலாக லியோ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்பார் என கூறப்படுகிறது. கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால் லியோ விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Ajith Kumar: பைக் ரேஸ் போதும், இனி சைக்கிள் ரைட் தான்.. குழந்தைகள் படை சூழ அஜித்.. இணையத்தைக் கலக்கும் ஃபோட்டோ!

Leo: ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிலாவில் நடக்கும்... மன்சூர் அலிகான் பதிலால் ஆடிப்போன விஜய் ரசிகர்கள்!

Continues below advertisement
Sponsored Links by Taboola