நடிகர் அஜித் குமார் சைக்கிளில் பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.


துணிவு பட வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62ஆவது படமாக உருவாக உள்ள விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அகித் குமார் ரசிகர் பட்டாளமும் ஒருபக்கம் காத்திருக்க, நடிகர் அஜித் மற்றொரு பக்கம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.


விடாமுயற்சி படம் ஏற்கெனவே பல பஞ்சாயத்துகளைக் கடந்து விக்னேஷ் சிவனை தாண்டி, மகிழ் திருமேனி கைகளுக்கு வந்துள்ள நிலையில், டைட்டில் அறிவிப்புக்குப் பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வேறு எதுவும் வராதது அஜித் ரசிகர்களை கவலையடைய வைத்தது.


மேலும் கடந்த சில நாள்களாக “விடாமுயற்சி ட்ராப் ஆகிவிட்டது போல..” எனும் அளவுக்கு கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பரபரப்பான தகவல்கள் கிளம்பிய சூழல், நார்வே, துபாய் எனப் பயணித்து தன் சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் மீண்டும் சென்னை திரும்பியது அவரது ரசிகர்களை  சற்றே ஆசுவாசப்படுத்தியது.


இதனிடையே நேற்று முன் தினம் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா நிறுவனர் சுபாஸ்கரன் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளது அஜித் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில், நடிகர் அஜித் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனைவி ஷாலினியுடன் கலண்டுகொண்டதுடன், அங்கிருந்த குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.






 


குழந்தைகள் படை சூழ நடிகர் அஜித் குதூகலமாகப் பயணித்த இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.


 






மீகாமன், தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் மகிழ் திருமேனி  விடாமுயற்சி படம் மூலம் முதன்முறையாக அஜித் உடன் கைக்கோர்க்க உள்ளார்.


அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், நடிகைகள் தமன்னா, சமந்தா என இரண்டு ஹீரோயின்கள் இப்படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.


மேலும் நடிகர் அர்ஜூன் தாஸூம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அஜித்தின் தொடர் சுற்றுலா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் ரசிகர்கள் அப்செட்டாக இருந்து வந்தனர். இந்நிலையில், சுபாஸ்கரன் தந்துள்ள விடாமுயற்சி அப்டேட் அஜித் ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.