நாசர், அசோக் செல்வன், மணிகண்டன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல், “ சினிமா ரசனைக்கு குஞ்சென்றும் மூப்பென்றும் தெரியாது. நெருப்புன்னா நெருப்புதான். திறமையில்லாமல் சினிமாவில் ஜொலிக்க முடியாது. இங்கு சாதி, மதம் கிடையாது. இதை சில பேர் மறுக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. திரையரங்கினுள் விளக்கை அணைத்து விட்டால், இங்கே சாதி கிடையாது. அந்த இருட்டில் ஒரே மதம், ஒரே ஒளிதான்.. பாலுமகேந்திரா எனக்கு உண்மையில் வாத்தியார். அவருடன் நண்பராக பழகி வந்த எனக்கு அது பின்னர்தான் புரிந்தது.  





படக்குழுவினர் படத்திற்கு சில நேரங்களில் சில மனிதர்கள் டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இதனை பலர் வேறுமாதிரியாக பார்ப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் ஜெயகாந்தன் இதைப் பற்றி கேட்கமாட்டார். 


படத்தை பாடல்களை வைத்து படத்தை கணித்துவிடமுடியாது. இதுவரை தமிழ் சினிமாவில் முழுமையாக ஒரு இசையை மையப்படுத்தி படம் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. என்ன இப்படி பேசிவிட்டார்.. என நினைக்க வேண்டாம். உண்மையில் நல்ல இசைப்படம் தமிழில் வர வேண்டும். மியூசிக்கல் படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு ஒத்திகை செய்ய வேண்டும். 




கொரோனாவை அஜாக்ரதையாக நினைக்க வேண்டாம். அதற்கு முன்னுதாரணமாக நானே இங்கு நின்று கொண்டிருக்கிறேன். எங்கேயோ அதை விட்டு விட்டேன்.. இங்கு இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய போது வராத கொரோனா, அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் போது வந்து விட்டது. இங்க எப்படி செருப்பு போடுறதை கவுரமா நினைக்கிறீங்களோ அதே போல மாஸ்க் போடுறத கவுரமா நினைங்க..” என்றார். 


 



மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்